உடலை பக்குவமாக பாதுகாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்!
நமது அன்றாட வாழ்வில், காய்கறிகள் என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தான் உள்ளது.
இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாகும். பாகற்காயில் உள்ள சத்துக்கள், சர்க்கரை வியாதியை முற்றிலும் நீக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடுவது நல்லது.
பித்தம்
பித்த அதிகரிப்பால், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால் பித்தம் குறைந்து விடும்.
மாதவிடாய் பிரச்னை
பெண்களுக்கு ஏற்பாடாக் கூடிய மாதவிடாய் பிரச்சனையை போக்குவதில் பாகற்காய் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. எனவே, மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், உணவில் தொடர்ந்து பாகற்காய் சேர்த்து வந்தால், இப்பிரச்சனை சரியாகி விடும்.
இரத்த சுத்திகரிப்பு
இரத்தத்தில் உள்ள கிருமிகளை அளிப்பதில் பாகற்காய் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. காலையில், வெறும் வயிற்றில் ஒரு கப் பாகற்காய் சூப்புடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர இரத்தம் சுத்தமாகும்.
காசநோய் பாதிப்புகள்
காசநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு, பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாகும். பாகற்காயின் இலைச்சாற்றுடன் சமபாகம் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால், காசநோயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகும்.