கருப்பு திராட்சையில் உள்ள திகைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்….!!!
பழ வகைகள் அனைத்துமே பல சத்துக்களை கொண்டுள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு.
திராட்சை
இந்த பதிவில் கருப்பு திராட்சை பழத்தின் நன்மைகளை பற்றியும், அவை என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பற்றியும் பார்ப்போம்.
திராட்சை பழத்தில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆண்டி- ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. திராட்சையில் பல வகைகள் உள்ளன. பச்சை திராட்சை, பண்றீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, அங்கூர் திராட்சை, காபூல் திராட்சை விதையில்லா திராட்சை என பல வகையான திராட்சைகள் உள்ளது.
சர்க்கரை நோய்
கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும்.
வயிற்று பிரச்சனை
திராட்சை பழம் வயிற்று பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழம் மலச்சிக்கலை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. திராட்சை பழத்தில் சர்க்கரை அதி அளவில் உள்ளது மற்றும் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் அதிகமாக உள்ளதால், இது வயிற்றுள் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
புற்றுநோய்
திராட்சை பழம் புற்றுநோயை தடுக்க கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. இதில் உள்ள சத்துக்கள், புற்று நோய் செல்களை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. குறிப்பாக கருப்பு திராட்சை மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது மற்ற புற்று நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
சிறுநீரக கல்
கருப்பு திராட்சை சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் சிறு நீரகத்தில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி, சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால்
சிறு நீரகத்தில் கொழுப்பை கரைக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இது உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கூடியது. மேலும் இது கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிப்பை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவார்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.
முடி வளர்ச்சி
திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய ஆற்றல் கொண்டது. இந்த பழத்தில் உள்ள ‘லிவோலியிக் அமிலம்’ மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.