மாம்பழ பிரியர்களே.! மாம்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

mango

மாம்பழம் -மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் அதன் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

இந்தக் கோடையின் வரப்பிரசாதம் தான் மாம்பழம். அதிக சுவையுடைய இந்த மாம்பழம் ராஜகனி எனவும் அழைக்கப்படுகிறது.

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்:

விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் ,மெக்னீசியம், நார்ச்சத்து கார்போஹைட்ரேட்ஸ் ,ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் நிறைந்துள்ளது.

மாம்பழத்தின் நன்மைகள்:

மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. இது  விட்டமின் ஏ யாக  மாறி கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .மேலும் லுதின் மற்றும் ஸியாக்த்தினின்   போன்ற ஆன்டி  ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. இது கண்களில் ரெட்டினால் செல்கள் சேதம் அடையாமல் பாதுகாக்கிறது.

கோர்ஸ்ட்டின், ஐசோ கோர்ஸ்ட்டின், கேலிக் ஆசிட், ப்சிடின்  போன்ற  ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் கேன்சர் செல்கள் உருவாக காரணமாக இருக்கக்கூடிய  ப்ரிரட்டிகல்ஸ்  செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் ஆக்சிடேட்டிவ் டிரஸ் மூலம் செல்கள்  சேதம் அடைவதை தடுக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மலக்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற எந்த வகை புற்று நோய்களும் நம் உடலுக்குள் வராமல் பாதுகாக்கிறது.

வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த ஒரு கிருமித் தொற்றும் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது. மேலும் விட்டமின் சி நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்தில் 50 சதவீதம் மாம்பழத்தில் உள்ளது.

அமைலேஸ்  என்சைம் இருப்பதால் நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்துகிறது. கடினமான உணவுகளை கூட எளிதாக ஜீரணம் செய்யக்கூடிய சக்தியும் மாம்பழத்துக்கு உள்ளது .

மேலும் நார்ச்சத்து இருப்பதால் மலக்கழிவுகள் இலகுவாக வெளியேறவும் உதவுகிறது .மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துகள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து நாடித் துடுப்பை சீராக்குகிறது.

பெட்டின் ,மேங்கோ பிரின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மூலம்  இதய செல்கள் பாதிப்படைவதை தடுக்கும். இதனால் இதயம் செயலிழப்பு மற்றும் ஸ்ட்ரோக் வராமலும் பாதுகாக்கப்படுகிறது.

சரும ஆரோக்கியத்தை பொருத்தவரை நம் சருமத்திற்கு தேவையான கொலாஜின் உற்பத்தியை இயற்கையான முறையில் அதிகரித்து  சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது.

பக்க விளைவுகள்:

மாம்பழங்களை அளவோடு எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. ஆனால் மாம்பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வயிற்றுப்போக்கு ,வாந்தி மற்றும் உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்.

அதிக சர்க்கரை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பிறகு எடுத்துக் கொள்ளவும். பொதுவாக சர்க்கரை நோய் இருந்தால் மாம்பழம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பார்கள்.

ஆனால் மாம்பழம் ஒரு துண்டு வீதம் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் கூடவே புரதம் நிறைந்த ஏதேனும் பயறு மற்றும் பருப்பு வகைகளை கட்டாயம்  எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மாம்பழத்தில் புரதச்சத்து இல்லை மாம்பழத்துடன் புரதச்சத்து சேர்ந்து எடுத்துக் கொள்ளும் போது அது ஜீரணம் ஆவதற்கு தாமதமாக்கப்படும். இதனால் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு ஏறாது. அதனால் ஒரு துண்டு வீதம் எடுத்துக் கொள்வது நல்லது தான். ஆனால் மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்