சாதம் வடித்த தண்ணீரால் குணமாகும் பெரிய நோய்கள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

boiled rice water

Boiled Rice Water-சாதம் வடித்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ,சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் சமையலறையில் குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சாதம் வடித்து சாப்பிடும் பழக்கத்தை மறந்துவிட்டோம் .இந்த சாதம்  வடித்த தண்ணீர் பல நோய்களை குணப்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சாதம் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகள்;

நீடித்த தொடர்ந்த வறட்டு இருமலை குணமாக்கும்.  ஒரு சிலருக்கு ஒரு  வார்த்தை பேசினாலே இருமல் வரும் .இது ஏனென்றால் இறப்பையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் தொண்டைக்கு வரும் நிலையால் ஏற்படும். இதை வயிற்றுப் பகுதியிலே வைக்க வேண்டும் என்றால் சாதம் வடித்த   தண்ணீரை குடித்தாலே போதும். வரட்டு இருமல் குறைந்துவிடும்.

பித்தத்தினால் ஏற்படும் தலைவலி, தலைசுற்றல், நெஞ்சு கரித்தல் போன்ற பிரச்சனை இருப்பவர்களும் சாதம் வடித்த தண்ணீரை குடித்து வரலாம். ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதை ஹைபர் கிளைசிமியா என்று கூறுவார்கள் .இவர்களுக்கு கண் பார்வை மங்குதல் போன்ற தொந்தரவு ஏற்படும் .இதனை தடுக்க சாதம் வடித்த தண்ணீரை குடித்து வரலாம்.

மேலும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி, கை கால் வலி ,உடல் சோர்வு போன்றவை இருக்கும். இவர்களும் சாதம் வடித்த  தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். எந்த நோயும் இல்லாவிட்டாலும் ஒரு சிலருக்கு எப்போதுமே உடல் சோர்வுடன் இருக்கும் இவர்கள் இந்த சாதம் வடித்த தண்ணீரை குடிக்கும்போது உடனடியாக ஆற்றலை பெற்று உடல் சோர்வு நீங்க சுறுசுறுப்பாவீர்கள் .

குடல் இயக்கத்தை சீராக்கும் தன்மை இந்த வடித்த கஞ்சி தண்ணீருக்கு உள்ளது. மேலும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது. வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவற்றை விரைவில் குணப்படுத்துகிறது.காய்ச்சல் சளி போன்று உடல் நிலை சரியில்லாத நேரங்களில் சாதம்  வடித்த நீரை குடித்தாலே போதும் உடனடியாக தெம்பு கிடைத்துவிடும் .

மேலும் புற்றுநோய் செல்களை உருவாக்கக்கூடிய பிரீ ராடிகள் செல்களை அழிக்கவும் செய்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. தலை முடி பராமரிப்பு பொறுத்தவரையில் சீயக்காய் பயன்படுத்துவது சிறந்தது. இந்த சீயக்காய்க்கு தண்ணீர் சேர்ப்பதற்கு பதில் இந்த வடித்த தண்ணீரை கலந்து தேய்த்து குளித்தால் தலைமுடி வலுவாக இருக்கும்.

மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு மூட்டு வலி அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் வெதுவெதுப்பான சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வலி  உள்ள இடத்தில் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து விட வேண்டும் பிறகு அதை கழுவிக் கொள்ளலாம்.

முகப்பருக்கள் வந்த பிறகு கரும்புள்ளிகள் ஏற்படும் இதனை குறைக்க சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தேவையான அளவு எடுத்து கஸ்தூரி மஞ்சள் உடன் கலந்து ஐந்து நிமிடம் முகத்தை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும் இதனால் முகப்பொலிவும் ஏற்படும்.

முக்கிய குறிப்பு;

மருத்துவ நலன்களை பெற சாதம் வடித்த தண்ணீரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் பாலிஷ் செய்யப்படாத அரிசிகளையும் ,கைக்குத்தல் அரிசிகளையும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் முழு பலனையும் பெற முடியும்.பாலிஷ் செய்யப்பட்ட அரிசிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..

சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளவும் .மேலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு இந்த தண்ணீரை குடித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு மகிமைகளை கொண்ட சாதம் வடித்த தண்ணீரை கீழே கொட்டி விடாமல் அதை முறையாக பயன்படுத்தி அதன் மருத்துவ குணங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் முடிந்தவரை குக்கரில் சமைத்து சாப்பிடுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்