இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தொப்பை பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்க என்ன செய்யலாம் என பலரும் பல வழிகளில் யோசிப்பதுண்டு. இதற்காக சிலர் அதிகப்படியான பணத்தை செலவழிப்பது உண்டு. ஆனால், நாம் எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்க முயற்சிக்கலாம் என பார்ப்போம்.
தொப்பை வருவதற்கான என்ன காரணம்?
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் மாற்றமடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய முன்னோர் அன்று கடைபிடித்த உணவு பழக்கவழக்கங்கள் தான் அவர்கள் நோய் நொடியுமின்றி, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்தது.
ஆனால் இன்று நாம் சாப்பிடும் உணவுகளால், உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய அளவுக்கு தள்ளப்படுகிறோம். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை வீட்டில் சமைக்க கூடிய உணவுகளை விட, பாஸ்ட்புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இவ்வாறு நாம் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், நமக்கு உடல் பருமன் அதிகரிப்பதோடு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், நமது தொப்பையை குறைக்க வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு இயற்கையான பானம் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் நாம் தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு மல்லி விதைகள் மற்றும் லவங்கம் பட்டையை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
அதனுள், அரைத்து வைத்துள்ள மல்லி மற்றும் இலவங்கப்பட்டையை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்த பின் அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். அதன் பின் ஒரு கிளாஸில் ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஊற்றி கொதிக்க வைத்த அந்த தண்ணீரை ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நான்கு கலக்கி கொள்ள வேண்டும்.
இந்த பானத்தை நாம் காலையிலேயே வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொப்பையை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், வாரத்திற்கு ஒருமுறை இதை குடித்து வந்தால் நல்ல பலனை பார்க்கலாம். இந்த பானம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்த பானத்தை குடிப்பதால், செரிமான பிரச்சனை நீங்குவதோடு, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைந்து உடல் எடை மற்றும் தொப்பை குறையும். தொப்பையை குறைக்க விரும்புபவர்கள், வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய, இந்த இயற்கையான பானத்தை குடிப்பது நல்லது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…