கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காதுனு சும்மாவா சொன்னாங்க! இந்த காயை வாரம் இருமுறை சாப்பிட்டாலே போதுமாம்…!
நம்மில் பலரும் சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வதுண்டு. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும், இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பொதுவாக நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அந்த வகையில் நம்மில் பலரும் சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வதுண்டு. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும், இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தற்போது இந்த பதிவில் சுண்டைகாய் மூலம் நமது உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இந்த காய் மிக சிறிய அளவில் இருந்தாலும், இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடலில் பலவகையான நோய்கள் நீங்கிவிடும்.
இரத்தம்
இரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் இது மிகவும் சிறந்ததாகும். இது ரத்தத்தை சுத்திகரித்து, உடல் சோர்வை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலும்புகள்
பெண்களின் பலவகையான பிரச்சினைகளுக்கு சுண்டைக்காய் ஒரு தீர்வாக அமைகிறது. பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், எலும்புகள் வலுப் பெறுகிறது. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமானத்தை தூண்டுகிறது. உடலில் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.
நீரிழிவு
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோயை குணப்படுத்துவதில் சுண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரச்சினை உள்ளவர்கள் சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, சோற்றுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
சுவாசப் பிரச்சனை
சுவாசம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.