ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வளிக்கும் பூவரச இலைகள்!
இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே பாதிக்கப்படக் கூடிய ஒரு நோய் என்றால் அது ஒற்றை தலைவலி தான். இந்த தலைவலி வந்தால், எந்த வேளையிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது.
இந்த தலைவலி ஏற்படுகிற நேரத்தில் நம்மிடம் யார் வந்து பேசினாலும், எரிச்சலாகவும், கோபமாகவும் இருக்கும். சொல்ல போனால் இந்த தலைவலி நம்மை முழுவதுமாக முடக்கி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது இந்த பதிவில், ஒற்றை தலைவலி தீருவதற்கான இயற்கையான மருத்துவத்தை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- பூவரச இலை (கொழுந்து இலை) – 10 இலைகள்
- வெள்ளைப்பூண்டு – 5
- மிளகு -10
செய்முறை
ஒற்றை தலைவலி உள்ளவர்கள், பூவரச இலைகளை பொடியாக நறுக்கி, அந்த இலையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து, வெள்ளைப்பூண்டு மற்றும் மிளகு இரண்டையும் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த கலவையை எடுத்து, ஒரு சட்டியில் இட்டு, ஒரு டம்ளர் நல்லெண்ணெய் ஊற்றி மெல்லிய தீயில் காய்ச்ச வேண்டும். அதன் பின் காய்ச்சிய எண்ணெயை இறக்கி ஆற வைத்து, தினமும் இரண்டு கரண்டி எண்ணெயை தலைக்கு வைக்க வேண்டும்.
அதனை 2 மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் ஒற்றை தலைவலி நிரந்தரமாக நீங்கி விடும்.