பெண்களே..! இது தெரிஞ்சா காளான தேடிப் போய் வாங்குவீங்க..!
Mashroom-அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் காளானும் ஒன்று. இந்த காளான்களில் விஷத்தன்மை வாய்ந்த காளான்களும் உள்ளது . இதில் நாம் பயன்படுத்தக்கூடிய காளான் எது மற்றும் அதன் நன்மைகள், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
காளான் வகைகள் :
காளான் என்பது ஒரு தாவரம் அல்ல, இது ஒரு பூஞ்சை வகையைச் சேர்ந்தது. ஆனாலும் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது.
உலகில் 15000 காளான் வகைகள் உள்ளது. அதில் நஞ்சு காளான், போதை காளான் என பலவகை உள்ளது .போதை காளான் கொடைக்கானல் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது .இதில் நாம் பயன்படுத்துவது மொட்டுக்காளான் மற்றும் சிப்பி காளான் ஆகும்.
காளானின் நன்மைகள்:
- காளான் புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கிய பங்காற்று கிறது.குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் ஏற்படமால் தடுக்கும் .மேலும் மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது.
- ஹீமோதெரபி எடுக்கும் போது ஏற்படும் போது பல பக்க விளைவுகள் ஏற்படும் .அந்த பக்க விளைவுகளை தடுக்கக்கூடிய தன்மை காளானுக்கு உண்டு .
- சோடியம் மிகக் குறைவாக உள்ளதால் இதய நோயாளிகள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம், மேலும் அடிக்கடி காளானை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இதய நோய் பிரச்சனைகள் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
- இதில் உள்ள வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மையை கொண்டுள்ளது.
- ஆஸ்துமா உள்ளவர்கள் காளானை சூப் செய்து எடுத்துக்கொள்ளும் போது ஆஸ்துமா குணமாகும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் நாள்பட்ட காயங்களை ஆற்றும் தன்மையும் காளானுக்கு உண்டு.
- வயதாக வயதாக ஒரு சிலருக்கு பேச்சில் தடுமாற்றம் ஞாபக மறதி ஏற்படும் ,இதை தடுக்க காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- கால்சியம் நம் உடலுக்கு முழுமையாக கிடைக்க விட்டமின் டி சத்து அவசியம் காளானில் இயற்கையாகவே விட்டமின் டி அதிகமாக உள்ளது.
- பாலி சாக்ரைடு என்று சொல்லக்கூடிய கடினமான மாவுச்சத்து உடலில் நல்ல பாக்டீரியாவை வளரச் செய்ய உதவுகிறது.மேலும் செலினியம் ,விட்டமின் டி , பி6 போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளது.
காளானை தவிர்க்க வேண்டியவர்கள்:
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காளானை சாப்பிடக்கூடாது . ஏனென்றால் இது பால் உற்பத்தியாகாமல் தடை செய்யும். வாதம் ,அலர்ஜி தொந்தரவு உள்ளவர்கள் தவிர்க்கவும்.
எனவே காளானை வாரத்திற்கு இரண்டு முறையாவது எடுத்துக்கொண்டு அதன் நற்பலன்களை பெறுவோம்.