ஆண்மை குறைவா..? கவலைய விடுங்க கிழே இருக்கும் ஆலோசனைய எடுங்க..!!
மிக அரிய மூலிகையான இந்த அஸ்வகந்தா மூலிகையை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மூலிகையாகும். சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். நாம் பொதுவாக வேகம் என்றால் குதிரையை தான் எடுத்துக்காட்டாக கூறுவோம். இந்த அஸ்வகந்தா மூலிகையானது நமக்கு ஒரு குதிரையின் ஆற்றலை தருகிறது. இது குறிப்பிட்ட சில உறுப்புகளுக்கு மட்டும் பயனை கொடுப்பதில்லை. முழு உடலுக்கும் தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த அஸ்வகந்தா மூலிகையின் மகத்தான பயன்களை இந்த பகுதியில் காணலாம்.
1. மன அழுத்தம் :
அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.
2. நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் பல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.
3. கேன்சரை தடுக்க
கேன்சரை தடுக்க அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.
4. நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
5. ஆண்மை அதிகரிக்க!
ஆண்மை அதிகரிக்க! அஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.
6. வேகம் அதிகரிக்கும்
வேகம் அதிகரிக்கும் அஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.
7. குணப்படுத்தும் பிற நோய்கள்
குணப்படுத்தும் பிற நோய்கள் அஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.
8. எப்படி சாப்பிடலாம்?
எப்படி சாப்பிடலாம்? நாட்டு மருந்து கடைகளில் அஸ்வகந்தா பொடி மற்றும் லேகிய வடிவில் கிடைக்கிறது. இதனை நீங்கள் நாட்டு மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.