நமது உடலில் அளவுக்கு அதிகமான கெட்ட கொழுப்புக்கள் சேர்ந்து விடுவதால் அது நமக்கு பல விதமான நோய்களை உண்டாகும். உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புக்கள் சேர்வதால் உடற் பருமன் ஏற்பட்டு இதய நோய்,மாரடைப்பு , பக்கவாதம் முதலிய நோய்களால் நாம் பாதிக்கபடுகிறோம்.
இந்த பாதிப்பில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை உற்பத்தி செய்ய நாம் என்னென்னெ உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
சிட்ரிக் பழங்களான லெமன் மற்றும் ஆரஞ்சு பழங்களை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்ளுவதால் அது நமது உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாற்று,மற்றும் தேன் கலந்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரையும்.
பூண்டு நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அலுசின் எனும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளதால் தினமும் நாம் 1 பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வர இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இது நமது உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் படி படியாக கரைக்க உதவுகிறது.
பசலை கீரையில் லுனின் மற்றும் நார் சத்து அதிகம் இருப்பதால் அது நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. இந்த சத்துக்கள் தமனியில்தங்கி இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனை வாரம் 2 முறை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
சின்ன வெங்காயம் இரத்த குழாயில் தங்கி இருக்கும் கொழுப்புகள் கரைக்க உதவுகிறது.சின்ன வெங்காயத்தை நாம் தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் அது நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது.
கத்தரிக்காயில் குறைந்த அளவு கலோரிகளே இருப்பதால் அது நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. எனவே கத்தரிக்காய் நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…