finger millet
Finger millet -ராகியின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகியை கேழ்வரகு, கேப்பை என்ற பெயரில் அழைப்பதுண்டு .இது அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் சிறு தானியமாகும் . ஆறு மாத குழந்தை முதல் 80 வயது வயதானவர்கள் வரை எளிதாக சாப்பிடக்கூடிய சிறந்த சிறுதானியமாகும். அதனால்தான் மேஜர் மில்லட் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
மற்ற தானியங்களை விட ராகியில் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், அயன், டயட்ரி ஃபைபர் ,பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ,விட்டமின் இ, விட்டமின் பி சத்துக்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.
100 கிராம் ராகியில் 340 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது புதிய எலும்பு திசுக்களை உருவாக்கி எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும். எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் மற்றும் ஆஸ்டியோபோரசிஸ் உள்ளவர்கள் தினமும் ராகியை ஒரு வேலையாவது எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மற்றும் கோதுமையை விட பல மடங்கு நார்ச்சத்து உள்ளது. குறிப்பாக கரையா நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பெருங்குடலில் உள்ள மலக்கழிவுகளை சுத்தமாக வெளியேற்றுகிறது.
கோதுமையை விட ராகி சிறந்தது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் இது குறைந்த கிளைசிமிக் கொண்டது. மேலும் உணவில் உள்ள மாவுச்சத்தை ஜீரணிக்க கூடிய வேகத்தை குறைக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ராகியை கூலாக எடுத்துக் கொள்வதை விட கீரை சேர்த்து ரொட்டியாக எடுத்துக்கொள்வது மற்றும் பருப்பு சேர்த்து கொழுக்கட்டையாக எடுத்துக் கொள்வது சிறந்தது.
இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது .100 கிராம் ராகியில் 4.6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையான 50% இரும்பு சத்து நம் உடலுக்கு கிடைத்து விடும். மேலும் புதிய ரத்த அணுக்களை உருவாக்குகிறது. இதில் விட்டமின் சி சத்தும் உள்ளதால் இரும்புச்சத்து எளிதில் உறிஞ்சப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதில் லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளதால் ரத்த குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கி மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது. மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ் இதில் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
ராகியில் விட்டமின் இ மற்றும் பி விட்டமின்ஸ் இருப்பதால் சரும கொலாஜின்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது .மேலும் தேமல் போன்ற சரும பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கிறது .
குளுட்டன் அதிகம் நிறைந்த மைதா, பார்லி போன்ற உணவு பொருட்களால் தயார் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது ஒரு சிலருக்கு மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் ராகி இவற்றிற்கெல்லாம் மிகச் சிறந்ததாகும்.
காலை வெறும் வயிற்றில் கூல் செய்து மோருடன் கலந்து எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். இது தவிர ராகி தோசை, ராகி ரொட்டி, ராகி இட்லி ,ராகி சேமியா, ராகி கொழுக்கட்டை போன்ற வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.
அதோடு மட்டுமல்லாமல் ஆறு மாத குழந்தைக்கு இணை உணவாக ராகியுடன் சில தானியங்களையும் சேர்த்து அரைத்து கூலாக கொடுத்து வந்தால் ஊட்டச்சத்து குழந்தைகளுக்கு அதிகம் கிடைக்கும்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…