வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும் சர்க்கரை கலந்த டீயை குடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.

மேலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ரத்த சோகையை கூட ஏற்படுத்தலாம் என பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது .டீகளில் ப்ளாக் டீ ,மசாலா டீ ,க்ரீன் டீ  என பல டீ  உள்ளது .அதில் நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் வெந்தய டீ யின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வெந்தய டீ செய்முறை;

இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து அதை நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் நாட்டு சக்கரை கலந்து குடித்து வரலாம்.

இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு குடித்துக் கொள்ளலாம்.

வெந்தய டீயின்  நன்மைகள்;

வெந்தய டீயில் அயர்ன் , சோடியம் போன்ற சத்துக்களும் தயமின் நிகோடின்  போன்ற அமிலங்களும் உள்ளது .இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு உடலை சமநிலைப் படுத்துவதற்கும் உதவுகிறது.

ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது .வெந்தய டீ குடிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்பட்டு ஹச் டி எல் என்று சொல்லக்கூடிய நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கச் செய்கிறது.

வெந்தய டீயில் அதிக அளவு அமினோ அமிலங்கள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது . குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதில் விட்டமின் ஏ சத்து இருப்பதால் சர்க்கரை நோயால் ஏற்படும் பார்வை குறைபாடு தடுக்கப்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
வெந்தயத்திற்கு ரத்தம் உறைதலை தடுக்கும் தன்மை உள்ளது. மேலும் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்தக்குழாய்களில் படிந்துள்ள  கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு மீண்டும் படியாமல் தடுக்கும்.

குடலை சுத்தப்படுத்த நினைப்பவர்கள் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் குடலில் உட்புறத்தில் படிந்துள்ள நாள்பட்ட கழிவுகளை அகற்றுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளையும் அகற்றி சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

உடலில் உள்ள அதிகமான கலோரிகளை எரித்து உடல் எடையை பராமரிக்கிறது.

வளரிலும் பெண்கள் இந்த டீயை குடித்து வந்தால் ஹார்மோன்களின் உற்பத்தி சீராக்கி கருப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்கிறது .

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து பால் உற்பத்தியை பெருக்குகிறது .தாய்ப்பாலின் சத்துக்களையும் அதிகரிக்கிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த டீயை குடித்து வந்தால் புண்கள்  சரியாகும். அது மட்டுமல்லாமல்  தலை முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது.

பக்க விளைவுகள்;

வெந்தய டீ உடலுக்கு நல்லது என்று அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் .அப்படி எடுத்து கொண்டால்  ஏப்பம் ,வயிற்றுப்போக்கு ,வாய்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.

மேலும் தோல் அரிப்பை கூட  ஏற்படுத்தும். வேறு ஏதேனும் உடல் பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருந்து எடுத்துக் கொள்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பிறகு தான் இந்த டீயை குடிக்க வேண்டும்.

நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள்இந்த  டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் கட்டாயம் வெந்தைய டீ குடிக்கக் கூடாது. ஏனெனில் இது ரத்தம் உறைதலை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது.

ஆகவே வெந்தயத்தின் நற்பலனை பெற  ஒரு நாளைக்கு இரண்டு கப் வீதம் எடுத்துக் கொண்டாலே போதுமானது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு அதன்  பலனை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi