சீரகத் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க.!

cumin

Cumin seed –சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பதிவில் காணலாம்.

சீரகத்தை தண்ணீரில்  கொதிக்க வைத்தோ அல்லது ஊற வைத்தோ குடித்தாலும் ஒரே பலன்கள்தான் கிடைக்கும்.

சீரகத்தில் உள்ள முக்கிய சத்துக்கள் :

இதில் தைமோ  குயினைன்  காம்பௌண்ட்ஸ் அதிகம் உள்ளது. மேலும் விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் இ , இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

சீரகத்தின் நன்மைகள் :

ஜீரணத்துக்கு தேவையான என்சைம்களை  தூண்டி நல்ல ஜீரண சக்தியை கொடுக்கிறது. வாய்வு  தொந்தரவு ஏற்படுவதையும் தடுக்கிறது.

அல்சர் உள்ளவர்கள் சீரகத்தை வெண்ணையில் கலந்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகிறது. வாய்ப்புண் உள்ளவர்களும் இதுபோல் சாப்பிட்டு வர குணமாகும்.

தூக்கமின்மை சரியாக வாழைப்பழத்தில் சீரகத் தூளை வைத்து சாப்பிட்டு வர நல்ல ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது.

உடல் சூடு இருப்பவர்கள் சீரகத்தை இரவில் ஒரு ஸ்பூன் அளவு ஊற வைத்து அதன் தண்ணீரை காலையில் குடித்து வர உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் பசி உணர்வையும் தூண்டும்.

வாய தொந்தரவு உள்ளவர்கள் சீரகத்தை வறுத்து பொடி செய்து ஐந்து சிட்டிகை அளவு உருக்கிய நெய்யில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த சீரகத் தண்ணீரை தினமும் குடிக்கும் தண்ணீரில் கலந்து குடித்து வர தலைவலி ஏற்படுவதை குறைக்கிறது .பித்தத்தை சமநிலை படுத்துகிறது . அதிக ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அது மட்டுமல்லாமல் விக்கல் பிரச்சனையும் சரி செய்து விடுகிறது.

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை குடித்து வருவதன் மூலம்  முகத்தை பளிச்சென்று மாற்றுகிறது . முடி வளர்ச்சியை தூண்டுகிறது .கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை குறைக்கவும் பயனுள்ளதாக உள்ளது.

இதில்  எபிஜெனின் லுடோலின்  என்ற முக்கிய ரசாயனம் உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது. உடலில் ஏற்படும் வீக்கங்களையும் சரி செய்கிறது.

மேலும் இந்த சீரகம் உணவு வழியாக பரவக்கூடிய நோய்களை தடுக்கவும் செய்கிறது.ஒரு ஸ்பூன் சீரகத்தில் 4 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ஸ்பூன் சீரகம் போதுமானதாகும் .

பக்க விளைவுகள்:

சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பை கூட ஏற்படுத்துகிறது .

மேலும் கர்ப்பிணி பெண்கள் அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை  கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் அளவோடு எடுத்துக் கொள்ளும்போது சுகப்பிரசவத்தை ஏற்படுத்தும். அதிகமாக எடுத்துக் கொண்டால் குறை பிரசவத்தை ஏற்படுத்த கூடும் .மேலும் முதல் மூன்று மாத கர்ப்ப காலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் உணவுப் பொருள்கள் நறுமண மூட்டிகளாக மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் செய்கிறது. ஆனால் அதை அளவோடு எடுத்துக் கொண்டால் மட்டுமே அதன் முழு பலனையும் நம்மால் பெற முடியும். எனவே சீரகத்தை அளவோடு சேர்த்து சீரான உடல்நலத்தை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்