தயிரின் ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

curd

Curd –தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

மலிவான விலையில் ஒரு மருத்துவப் பொருள் உள்ளது என்றால் அது தயிர் தான். அந்த அளவுக்கு தயிரில்  மருத்துவ குணம் உள்ளது.

தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

தயிரில் அதிக அளவு புரதம் ,வைட்டமின் பி, ரிபோபிளவின் , வைட்டமின் பி12, கால்சியம், ப்ரோபையோடிக்ஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சிங்க் , பாஸ்பரஸ், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.

தயிரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

தயிரில் லாக்டோ பேசிலஸ் என்ற என்சைம் உள்ளது. இது நல்ல ஜீரண சக்தியை தூண்டுகிறது. மேலும் இதில் உள்ள ப்ரோபயோடிக் குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது. அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலை சரி செய்கிறது. வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

இது  மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து நல்ல தூக்கத்தையும் வரவழைக்கிறது. மேலும் கார்டிசோல்  ஹார்மோனை சீராக்கி மன அழுத்தத்தையும் போக்குகிறது.

பால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 30 சதவீதம் ஜீரணம் ஆகிறது, ஆனால் தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% ஜீரணம் ஆகி விடுகிறது.

சிறு வயது முதல் இருந்தே  தயிர் எடுத்துக்கொண்டு வந்தால் பிற்காலத்தில் ஏற்படும் மூட்டு வலி ,ஆஸ்டியோபோரோசிஸ்  போன்ற நோய்களை தடுக்கலாம்.

தயிர் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால் கர்ப்பிணி பெண்கள் தயிரை மதிய உணவில் எடுத்துக் கொள்வது கருவில் வளரும் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும்.

மேலும் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயிரை  எடுத்துக் கொள்ளும்போது அதிலிருந்து விடுபடலாம். ஒரு நாளைக்கு தேவையான புரதச்சத்தில் ஒரு கப் தயிரில் 50 சதவீதம் நமக்கு கிடைத்து விடுகிறது.

உடல் மெலிந்து உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களின் உடல் எடையை அதிகரித்து சருமமும்  பளபளக்க உதவுகிறது.

தயிரை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கூறுவார்கள், ஆனால் இரவு நேர பணி செய்பவர்கள் தயிர் எடுத்துக் கொண்டால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

தயிரை  தவிர்க்க வேண்டியவர்கள்:

அடிக்கடி சளி பிடிப்பவர்கள், ஆஸ்துமா, ஜலதோஷம் இருப்பவர்கள் தயிரை அளவோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதய நோய் உள்ளவர்களும் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ரத்தக்குழாய்களில் அடைப்பு ,உடலில் அங்கங்கே வீக்கம் ,அரிப்பு, அக்கி போன்றவற்றை ஏற்படுத்தும் .மேலும் மீன் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டு தயிரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் .ஏனென்றால் இது வெண் புள்ளிகளை ஏற்படுத்தும்.

என்னதான் தயிர் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் செய்தாலும் அதை அளவோடு எடுத்துக் கொண்டால் மட்டுமே நம் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
aakash chopra abhishek sharma
elon musk donald trump
mk stalin assembly NEET
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks