மண்பானை தண்ணீரின் மகத்துவமான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

pot water

Pot water -மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பதால்  ஏற்படும் நன்மைகள் பற்றி  இப்பதிவில் காணலாம்.

என்னதான் காலமாற்றங்கள் ஏற்பட்டாலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மண் பாத்திரங்கள் நம் பயன்பாட்டில் இருந்தது  குறிப்பிடத்தக்கது. தற்போதும் இதன் விழிப்புணர்வு மக்களிடையே நிலவுவதால் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது ஆச்சரியம் தான்.

மண்பானை தண்ணீரின் நன்மைகள்:

மண்பானையில் நீர் வைத்து குடிப்பதால் பல்வேறு நன்மைகள் நம் உடலில் ஏற்படுகிறது, இயற்கையின் குளிர்சாதனை பெட்டி என்று கூட கூறலாம்.

மண் பானைக்கு சுவாசிக்கும் தன்மை உண்டு. மேலும் வெளியில் உள்ள காற்றை உள்வாங்கும் தன்மையும் உள்ளது, இதனால்தான் தண்ணீர் குளுமையாக இருக்கிறது.

இயற்கையான காரத்தன்மை உள்ளதால் உடலில் PH  அளவை சீராக்கும், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மண் பானை தண்ணீரை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, உணவின் மூலம் ஏற்படும் எரிச்சலை சமநிலைப்படுத்தி அல்சரை குணமாக்கும் ,வாய்ப்புண்களையும் குணமாகிறது.

மெட்டபாலிசத்தை சீராக்கும் ,உடல் உஷ்ணத்தை குறைக்கும் .கண்களில் ஏற்படும் ஸ்ட்ரெஸை குறைக்கும் .செரிமானத்தை தூண்டும். இதில் உள்ள தாது சத்துக்கள் உடலில் காயங்கள் இருப்பதை ஆற்றும்  தன்மை கொண்டது.

இதில் கனிம சத்துக்கள் அதிகமாக இருப்பதால் பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்து கோடை காலத்தில் ஏற்படும் தீராத தாகத்தையும் போக்கும்.பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

பொதுவாக நீரில் நல்ல கிருமிகளும், கெட்ட கிருமிகளும் இருக்கும் .இதனை நாம் காய்ச்சும் போதோ அல்லது மினரல் வாட்டராக மாற்றும் போதோ இதில் நல்ல கிருமிகளும் அளிக்கப்படுகிறது.

இந்த நல்ல கிருமிகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதுவே மண்பானைகளில் வைத்து குடிக்கும் போது, பானைக்கு   கெட்டநீரை வெளியேற்றி நல்ல நீராக மாற்றும் தன்மை உள்ளது.

கோடை காலத்தில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கும். உடலில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கும்.இதில் உள்ள அல்கலைன்  என்ற மூலப்பொருள்  PH அளவை  சமநிலையாக வைத்துக் கொள்ளும்.மேலும் டெஸ்டோஸ்டிரோன்  என்ற ஹார்மோன் அளவை சமநிலையாக வைத்துக் கொள்ளும்..

மண்பானையை பயன்படுத்தும் முறை :

மண் பானைகளை முதன் முதலில் பயன்படுத்தும்போது ஒரு வாரம் நீரை அதில் ஊற்றி வைத்து பிறகு அதை கொட்டி விட்டு மறுமுறை சேகரித்து வைக்கும் நீரை தான் பருக வேண்டும்.

மேலும் மண் பானைகளில் தற்போது செராமிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த செராமிக் உள்ள மண் பாத்திரங்களை  பயன்படுத்தக் கூடாது.

என்னதான் தண்ணீரை சுத்தப்படுத்தவும், குளிர்விக்கவும் பல மின்சார பொருட்கள் வந்தாலும் மண் பானைக்கு ஈடாகாது என்று கூறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்