தைராய்டு நோயின் முன் அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க.!

thyroid

Thyroid Symptoms-தைராய்டு வர காரணங்களும் அறிகுறிகளையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தைராய்டு சுரப்பி ;

முன் கழுத்தின் மேல் பகுதியில் வண்ணத்துப்பூச்சி போல் இருக்கும் அமைப்புதான் தைராய்டு சுரப்பியாகும் .இது நம் உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

அது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை கட்டுப்படுத்தி அவற்றின் இயக்கத்தை தூண்டக்கூடியதுமாகவும் இருக்கிறது .ஆண் ,பெண் என இருபாலருக்கும் வரக்கூடியதாகும் .

காரணங்கள் ;

இந்த சுரப்பி பாதிக்கப்பட பல காரணங்கள் உள்ளது. அதில் அதிக மன அழுத்தம் ,உணவு பழக்கவழக்கங்கள் ,உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, அயோடின் பற்றாக்குறை, உள் உறுப்புகளின் பாதிப்புகள் மற்றும் மரபு ரீதியாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தைராய்டு ஹைபோ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்;

தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் அது ஹைபோதைராய்டிசம் ஆகும்.

அறிகுறிகள்;

உடல் எடை அதிகமாக இருப்பது என்னதான் உடல் எடையை குறைக்க நினைத்து பல முயற்சிகளை செய்தாலும் எடை குறையாமல் இருப்பது .இதயத் துடிப்பு குறைவாக இருப்பது, அதிக சோர்வு, முறையற்ற மாதவிலக்கு ,தலைமுடி உதிர்வு, மலச்சிக்கல், வறண்ட சருமம், அதிகமான குளிர் உணர்வு,

குறிப்பாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் குளிர்வது போன்று இருப்பது ,பாலுணர்வு குறைந்து காணப்படுவது, எப்போதுமே தூங்க வேண்டும் என்ற உணர்வு அதிகம் இருப்பது, ஞாபகம் மறதி, முகம் உப்பி காணப்படுவது, முன் கழுத்து வீங்கி இருப்பது,

ரத்தத்தில் டி3 ,டி4 ஹார்மோனின் அளவு குறைவாகவும்,TSH என்று சொல்லக்கூடிய தைராய்டு ஸ்டூமுலேஷன் ஹார்மோன் அதிகமாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது ஹைபோ தைராய்டிசம் ஆகும்.

ஹைப்பர் தைராய்டிசம்;

தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருப்பது ஹைப்பர் தைராய்டிசம் ஆகும்.

அறிகுறிகள்;

உடல் மெலிந்து காணப்படுவது என்னதான் உடல் எடையை கூட்ட நினைத்தாலும் எடை கூடாமல் இருக்கும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும், பயம் பதட்டம் கை கால் நடுக்கம் போன்றவை இருக்கும், அதிக பசி உணவு, மாதவிடாய் கோளாறு, அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் ,தூக்கமின்மை, செரிமான கோளாறு,

உடல் சூடு அதிகமாக இருப்பது, கண்கள் மட்டும் பெரிதாக காணப்படுவது, நகங்கள் பருத்து  உப்பி காணப்படுவது, ரத்தத்தில் டி3 ,டி4 ஹார்மோனின் அளவு அதிகமாகவும் TSH  குறைவாகவும் இருந்தால் ஹைப்பர் தைராய்டிசம் ஆகும்.

இதுவே ஒருவருக்கு தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும் மேலும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே உறுதிப்படுத்தி கொள்ளவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்