ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..!
Ice water -ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லை என்றால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் .அதனால் தண்ணீர் போதுமான அளவு குடிப்பது அவசியம் ,அதுவும் கோடை காலங்களில் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும் அதற்காக ஜில்லென்று குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகிறது. அது என்னவென்று காணலாம்.
ஐஸ் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் ;
நம் சாப்பிடும் உணவுகளில் நல்ல கொழுப்பும் உள்ளது, கெட்ட கொழுப்பும் உள்ளது .இந்த ஐஸ் தண்ணீரை குடிக்கும்போது கெட்ட கொழுப்புகள் கரையாமல் அங்கேயே தங்கி அதிகரித்து விடும். இதனால் இதய நோய் வர வாய்ப்புள்ளது.
ஐஸ் தண்ணீரை குடித்த உடனே ரத்த நாளங்கள் சுருங்கச் செய்யும். இதனால் உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது .மேலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
சாப்பிடுவதற்கு முன் ஐஸ் வாட்டர் குடித்தால் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாப்பிட்ட பின் ஐஸ் தண்ணீர் குடித்தால் சாப்பிட்ட உணவுகள் கடினமாக்கப்படுகிறது இதனால் மலச்சிக்கல் போன்றவையும் ஏற்படும்.
அடிக்கடி ஐஸ் தண்ணீர் குடிப்பவர்களுக்கு பல் கூச்சம் பிரச்சனை ஏற்படும். பல் ஈறுகளில் விரிசல் போன்றவையும் ஏற்படுவதால் மற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதில் சிரமம் உண்டாகும்.
மேலும் தொண்டை புண் ,தொண்டை வலி ,மூக்கடைப்பு ,சுவாச குழாயில் அதிக சளி உருவாவதையும் வழிவகுக்கும். ஐஸ் வாட்டர் குடித்த உடனே மூளையில் உள்ள நரம்புகள் சுருங்கி விரியும் இதனால் தலைவலி பிரச்சனையும் ஏற்படுத்தும்.
ஐஸ் தண்ணீர் குடித்தால் கெட்ட கொழுப்புகள் நம் உடலிலே தங்கிவிடும் .இதனால் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனையும் ஏற்படுகிறது. பொதுவாகவே ஒரு மனிதனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 72 முறையாகும் .ஆனால் அடிக்கடி ஐஸ் தண்ணீர் குடிக்கும் போது நாளடைவில் இதயத்துடிப்பு 60க்கு கீழ் சென்றுவிட கூடும் என மருத்துவ ரீதியாகவும் கூறப்படுகிறது.
ஆகவே இவ்வளவு சீர்கேடுகளை உண்டாக்கக்கூடிய ஐஸ் வாட்டரை குடிப்பதை குறைத்துக் கொண்டு முடிந்தவரை நார்மல் தண்ணீரோ அல்லது சுடு தண்ணீரோ எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைவதோடு மட்டுமல்லாமல் படிவதும் தடுக்கப்படுகிறது. நம் உடலுக்கு எது நல்லதோ அதை செய்தால் நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.