ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

mutton soup benefit

Mutton bone soup-ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆட்டுக்கால் சூப்பை நாம் சுவைக்காகவும் அல்லது சளி இருமல் போன்ற தொந்தரவு இருந்தால் குடிப்போம். ஆனால் இதில் பலருக்கும் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.

ஆட்டுக்கால் சூப்பின்  நன்மைகள்:

ஆட்டுக்கால் சூப்பில்  கொலாஜின் என்ற சத்து அதிக அளவில் உள்ளது . இந்த சத்து தசை நார்கள், தசைகள் ,நரம்பு மண்டலம், எலும்புகள் போன்றவற்றிற்கு மிக அவசியமான புரதச்சத்தாகும்.

அதுமட்டுமல்லாமல் சரும சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும் இந்த கொலாஜின் சத்து அவசியமானது. மேலும் கால்சியம் மெக்னீசியம், பாஸ்பரஸ், சிங்க் , செலினியம், விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

மூட்டு வலியை குணமாக்கும் ;

மூட்டுகளில் உள்ள மினிஸ்கஸ்  என்ற பகுதியில் வறட்சி ஏற்படுவதாலும் மூட்டுகளுக்கு இடையில் உராய்வின் காரணமாகவும் மூட்டு வலி ஏற்படும். மேலும் கொலாஜின் உற்பத்தி குறைவதன்  மூலமும் மூட்டு வலி ஏற்படுகிறது.

வயதானவர்கள் மற்றும் நீண்ட நாள் உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கொலாஜின் சத்து குறைவாக இருக்கும் இப்படிப்பட்டவர்கள் தினமும் ஆட்டுக்கால் சூப் குடித்து வரவேண்டும்.

முடக்கு வாதம்;

ஆர்த்ரைடீஸ் என்று சொல்லக்கூடிய முடக்கு வாதம் வராமல் தடுக்கும் தன்மையும் ஆட்டுக்கால் சூப்பிற்கு உள்ளது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.

குடல் ஆரோக்கியம்;

குடல் புண்கள் ,குடல் எரிச்சல், குடல் சிதைவு போன்றவற்றை குணப்படுத்தும். இதில் உள்ள L- குளுட்டமைன் மற்றும் அமினோ ஆசிட் ,செலட்டின் போன்ற சத்துக்கள் குடலுக்கு நல்ல வலிமையை கொடுப்பதோடு குடல் இரைச்சல் பிரச்சனை குணமாக்குகிறது ,வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களையும் அதிகமாகிறது.

உடல் எடை குறைப்பு;

இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளதால்  குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் அதிக உணவு எடுத்துக் கொள்வது தடுக்கப்படும் ,அதுமட்டுமல்லாமல் போதிய அளவு ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும்.

எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம்;

இதில் கால்சியம் ,மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் இவை பல் மற்றும் எலும்பு உறுதிக்கு உதவுகிறது .அது மட்டுமல்லாமல் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் கிளைசின்  போன்ற சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி;

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதில் உள்ள அர்ஜுனைன் ,குளுட்டமைன்  போன்ற அமினோ ஆசிட் அதிகம் உள்ளதால் ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.

இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவது சளி தொந்தரவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது .மேலும் சளி பிடித்தவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் கொடுத்தால் விரைவில் குணமாகும்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட ஆட்டுக்கால் சூப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்