வெள்ளரிக்காயின் அசத்தலான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!
Cocumber-வெள்ளரிக்காயின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடும் முறைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வட இந்தியர்கள் 80 சதவீதம் சாப்பாட்டிற்கு பின் வெள்ளரியை சாலட் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். தென்னிந்தியாவில் 20% மக்கள்தான் உணவுக்குப் பின் வெள்ளரியை பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளரிக்காயின் நன்மைகள்:
- நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உடல் சோர்வு அதனால் ஏற்படும் தலைவலி ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நல்ல புத்துணர்வை தரும்.
- இதில் மிக குறைவான கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
- வெள்ளரிக்காயில் பீட்டா கரோட்டின் ,பிளேவனாய்ட்ஸ், தாதுக்கள் , பொட்டாசியம் மெக்னீசியம், லிக்னீன்ஸ் உள்ளதால் நம் உடலில் ஏற்படும் வீக்க அணுக்களை குறைக்கும் .குறிப்பாக கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கத்தை குறைக்கும். மேலும் கண்களில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு, கரு வளையங்கள் ஆகியவற்றை குணமாக்கும்.
- இதில் உள்ள சிட்ருலின் என்ற ரசாயனம் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். மேலும் ஆண்மை குறைவை போக்கும் தன்மையும் உள்ளது. மலச்சிக்கலையும் சரி செய்யும்.
- குறைந்த கிளைசிமிக் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெள்ளரிப்பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
- வெள்ளரியில் உள்ள விட்டமின் கே சத்து உணவில் உள்ள கால்சியத்தை உறுஞ்சி நம் உடலுக்கு கொடுக்கும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகளில் கால்சியம் சத்து கரைய துவங்கும். இந்த கால்சியம் பற்றாக்குறையை தீர்க்க பெண்கள் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வருகிறது. இதில் கொலாஜின் இருப்பதால் சருமம் விரைவில் சுருங்காமல் பாதுகாக்கும்.
வெள்ளரிக்காயை சாப்பிடும் முறை:
- வெள்ளரிக்காயை முதல்முறையாக எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வாமை ,அலர்ஜி ஏற்படலாம் .அதனால் உங்கள் உடலுக்கு ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து சாப்பிடலாம்.
- இரவில் வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள குகுர்பிட்டின் என்ற என்சைம் சிறுநீர் உற்பத்தியை அதிகப்படுத்தி தூக்கத்தை பாதிக்கும்.
- மேலும் இது குளிர்ச்சியான பொருள் என்பதால் சளி பிடிக்க நேரலாம். அதனால் பகலில் எடுத்துக் கொள்வதே சிறப்பு.தோளில் அலர்ஜி அரிப்பு இருப்பவர்கள் வெள்ளரிக்காயை தவிர்க்கவும்.
எனவே கோடை காலம் தொடங்கி விட்டதால் நம் கண்கள் ஆரோக்கியத்திற்கும் உடல் குளிர்ச்சிக்கும் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்து கொள்வோம்.