புங்கை மரம் -புங்கை மரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
புங்கை மரத்தை புங்கன் மரம் என்றும் கூறுவார்கள் .அழிந்து வரும் மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கை மரம் வேப்ப மரத்திற்கு சமமான மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
இந்த மரத்தில் பூக்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூத்துக் குலுங்கும்.இதன் இலைகள் உரமாக பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு வறட்சியான இடங்களிலும் தாண்டி வளரக்கூடியது.
சூரிய புற ஊதா கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.மேலும் புங்கை புண்ணாக்கு யூரியாவுக்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது.மண் அரிப்பை தடுக்கக்கூடியது .
புங்கை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இயல்பு என்னவென்றால் வளிமண்டலத்தில் உள்ள 72 சதவீதம் நைட்ரஜனை அதன் இலைகள் தேக்கி வைத்துக் கொள்ளும்.
ஒரு ஆராய்ச்சியின் படி மீத்தேன் ஐசோ சயனைடு என்ற ஒரு விஷ வாயுவை தனக்குள் கிரகித்துக் கொண்டு மனிதர் குலத்தை உயிர் வாழ வைக்கும் தன்மை கொண்டுள்ளது.எனவே அனைவரது வீடுகளிலும் வளர்க்க வேண்டிய மரமாகும் .
புங்கை மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சொரியாசிஸ் போன்ற தோல் வியாதிகள், தீக்காயம், கீழ்வாதம் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. மேலும் பயோடீசல் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது
புங்கை இலைகளை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பசியின்மை, உடலில் ஏற்படும் கட்டிகள், அரிப்பு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
மேலும் புங்கை இலைகளை அரைத்து கொப்புளங்கள் உள்ள இடத்தில் பூசி வர குணமாகும். மேலும் மூலநோய்க்கும் சிறந்த மருந்தாகிறது .
புங்க இலையின் பூக்களை நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம் .
எனவே அழிந்து வரும் புங்கை மரத்தின் பயன்கள் நம்மோடு சென்று விடாமல் நம் தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்வோம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…