மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க ..!

fish oil capsule

மீன் எண்ணெய் மாத்திரை -மீன் எண்ணெய்  மாத்திரையின் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

மீன் எண்ணெய் மாத்திரைகள்;

வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அங்குள்ள அதிக குளிரை தாங்கிக் கொள்ளவும் மீன் எண்ணெய்   மாத்திரைகளை பயன்படுத்தி வந்தனர், ஆனால் இன்று உலகம் முழுவதும் இந்த மாத்திரை பரவலாக உட்கொள்ளப்படுகிறது .அதேசமயம் இதன் நன்மைகள் தீமைகள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

நம் உடலுக்குத் தேவையான அதே நேரத்தில் இயற்கையாக எளிதில் கிடைக்காத நம் உடல் உற்பத்தி செய்ய முடியாத சத்துக்கள் சுறா மற்றும் திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன்களில் கிடைக்கிறது.

அதனால் இவற்றின் கல்லீரலில் இருந்து எண்ணெயை எடுத்து பல கட்ட சுத்திகரிப்பிற்கு பின் சிறிய டியூப்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது இதுதான் மீன் எண்ணெய் மாத்திரை ஆகும்.

நன்மைகள்;

இந்த மீன் மாத்திரையில் விட்டமின் ஏ மற்றும் டி ஒமேகா 3 பேட்டி ஆசிட் ,DHA,EPA போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மூளையின் செயல்பாட்டிற்கும் ,எலும்பு வளர்ச்சிக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு எலும்புகள் வலி போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. குறிப்பாக ட்ரை கிளிசராய்டு  என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பை குறைக்கக் கூடியது.

இதனால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும். மேலும் உயர் ரத்த அழுத்தம் , டென்ஷன், படபடப்பு, மன அழுத்தம் உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் போது மன அமைதியை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.

விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வை திறன் குறைவதை தடுக்கிறது .வறண்ட சருமத்திற்கு நல்ல மினுமினுப்பை கொடுக்கிறது. முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. இதில் இ பி ஏ சத்து உள்ளதால் இடுப்பு எலும்பு வலி, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் தரும்.

முக்கிய குறிப்புகள்;

சிறுநீரகப் பிரச்சனை ,கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் அல்லது வேறு ஏதேனும் நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கட்டாயம் மருத்துவரின் பரிந்துரையின் படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,அதிக ரத்த போக்கு உள்ளவர்கள் இந்த மாத்திரையை தவிர்க்கவும் .

விட்டமின் ஏ சத்து அதிகம் இருப்பதால் இந்த மாத்திரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம். இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் இவ்வாறு எடுத்துக் கொள்ளலாம்.

பக்க விளைவுகள் ;

மீன் மாத்திரைகளை 1 கிராம் எடுத்துக்கொண்டாலே போதுமானது .அதிகமாக எடுத்து கொண்டால் வயிறு வலி,சருமத்தில் சிவந்த தடிப்பு ,அரிப்பு ,குமட்டல் ,அதிக ரத்த போக்கு ,போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் .

ஆகவே முடிந்த வரை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்து கொள்வது நல்லது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Watermelon - sathish kumar
mk stalin modi
PMK MLA Metur Sadhasivam - BJP State president Annamalai
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump