சப்ஜா விதைகளை சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சப்ஜா விதை- சப்ஜா விதைகளின் நன்மைகள் , யார் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
சப்ஜா விதைகள்:
சப்ஜா விதைகள் என்பது திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் ஆகும். இது ஒரு துளசி குடும்பத்தைச் சேர்ந்தது. சப்ஜா விதைகளை ஆயுர்வேத மருத்துவத்திலும் சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சப்ஜா விதையின் நன்மைகள்:
- சப்ஜா விதையில் அதிக அளவு தாது சத்துக்கள் உள்ளது, குறிப்பாக கால்சியம், மெக்னீசியம் ,அயன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சத்துக்கள் பால் மற்றும் இறைச்சியில் அதிகம் இருக்கும் ,பால் இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு சப்ஜா விதைகள் ஒரு அருமருந்தாகும்.
- மேலும் ஒமேகா 3, விட்டமின் கே ,நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.ப்ரோ பையாடிக் இதில் உள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- சப்ஜா விதைகளை லெமன் ஜூஸ், நன்னாரி சர்பத் போன்ற ஜூஸ் வகைகளுடன் எடுத்துக்கொள்ளவும் .வெறும் விதைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது .
- உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை கணிசமாக குறையும். சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யும்.
தவிர்க்க வேண்டியவர்கள்:
- பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவை சப்ஜா விதைகள் குறைக்கிறது என்பதால் பெண்கள் மிகக் குறைவான அளவு எடுத்துக் கொள்ளவும்.
- குழந்தைகளுக்கு சப்ஜா விதைகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் .இது வயிறு உப்பசம் போன்ற வயிறு உபாதைகளை ஏற்படுத்தும்.
- அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருப்பவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து சில நாட்கள் ஆனவர்கள் சப்ஜா விதைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எனவே சப்ஜா விதைகளின் நன்மைகளைப் பெற ஆண்கள் வாரத்திற்கு ஐந்து நாட்களும் பெண்கள் , வாரத்திற்கு இரண்டு நாட்களும் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025