மழைநீரில் உணவுகளை சமைப்பதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!
Rain water-மழை நீரின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் காணலாம்.
மழைநீர் :
மழைக்காலங்களில் நீரை சேமித்து குடிப்பது, உணவுகள் தயாரிக்க பயன்படுத்துவது என்று கிராமப்புறங்களில் இன்றும் நிலவி கொண்டுதான் இருக்கிறது.
இந்த மழை நீரை குடிப்பதால் கிருமி தொற்று ஏற்படுகிறது என பல தரப்பு மக்களிடம் கருத்தும் உள்ளது .அதன் உண்மை தன்மை என்ன என்பதையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
மழைநீரில் உள்ள சத்துக்கள் :
மழை நீரில் விட்டமின் பி12 சத்தும் , தாதுக்களும் உள்ளது .இந்த விட்டமின் பி12 சத்து அசைவ உணவுகளில் அதிகம் உள்ளது ,அது தவிர ஒரு சில உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் மழை நீரில் அமிலத்தன்மையும் உள்ளது .அதனால் அதை நாம் முறையாக சேகரித்து பயன்படுத்துவது அவசியம்.
மழை நீரை சேகரிக்கும் முறை:
மழை வந்து 15 நிமிடங்கள் கழித்து பிறகு வரும் நீரை தான் சேகரிக்க வேண்டும். ஏனென்றால் காற்றில் உள்ள நச்சுக்கள் முதலில் வரும் நீரோடு சேர்ந்தே வரும்.
மழை நீரை துணியால் வடிகட்டி காற்று மற்றும் சூரிய ஒளி புகாதவாறு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
இது ஒரு சிலருக்கு சளி தொந்தரவை ஏற்படுத்துவதால் கொதிக்க வைத்து ஆறவைத்து பிறகு அருந்தவும்.குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுப்பது இவ்வாறு கொடுங்கள் .
இந்த மழை நீரை வருடக் கணக்கில் வைத்து பயன்படுத்தலாம். மேலும் இதில் பூஞ்சைகள், புழுக்கள் உள்ளதா என பார்த்து கவனமுடன் பயன்படுத்த வேண்டும். உணவுகள் தயாரிக்கவும் இந்த நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மழை நீரை தூய்மையான குடியிருப்பு பகுதியில் சேகரிப்பது தான் தரமானதாக இருக்கும் .அனல் மின் நிலையங்கள் போன்ற காற்று மாசுபாடு அடையும் இடங்களில் சேகரித்த நீர் தூய்மையாக இருக்காது .
மழை நீரின் நன்மைகள்:
மழை நீரை நாம் உணவுகளிலும், குடிநீருக்கும் பயன்படுத்தும் போது செரிமான பிரச்சனை இல்லாமல் பாதுகாக்கிறது. மழை நீரில் ஆல்கலின் PHஉள்ளதால் இது உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
சரும ஆரோக்கியத்தில் தோலுக்கு நல்ல பளபளப்பை கொடுக்கும், முடியின் வேர்க்கால்களை வலுவடைய செய்யும்.
நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்க குளோரின் கலக்கப்படுகிறது, இதைத்தொடர்ந்து நாம் பயன்படுத்தும் போது உடலில் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும். ஆனால் மழை நீரில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை.
மேலும் தெளிந்த சிந்தனைகளையும் தரும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
ஆகவே இனிமேல் மழை பெய்தால் மறந்துவிடாமல் நீரை முறையாக சேகரித்து பயன்படுத்தி மழை நீரின் முழு பலன்களை பெறுவோம்.