Jaggery– வெல்லத்தில் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி எனவும் சீனியை விட வெல்லம் சிறந்ததா என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
நம்மில் பலரும் சீனியை விட வெல்லம் தான் சிறந்தது என்று டீ காபிகளில் பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா என்றும் தெரிந்து கொள்ளவோம் .
கரும்பிலிருந்து சாறு எடுத்து அந்த சாறு கொப்பரையில் ஊற்றி கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்கும்போது வரும் அழுக்குகள் நீக்கப்படுகிறது .அந்த அழுக்கு நீக்கப்படுவதற்கு கிளாரிபையிங் ஏஜென்ட் சேர்க்கப்படுகிறது. மேலும் சமையல் சோடா, காய்கறியில் இருந்து எடுக்கப்படும் சுண்ணாம்பு போன்றவைகளும் பயன்படுத்தப்படுகிறது .
பிறகு அந்த வெல்ல பாகுவை வேறு ஒரு ட்ரேயில் ஊற்றி ஆற வைத்து அந்த பாகுவை உருண்டை வெல்லம் , அச்சு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையாக தயாரிக்கப்படுகிறது.
100 கிராம் வெல்லத்தில் 85 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது. மீதம் 15 சதவீதம் மற்ற தாது சத்துக்கள் உள்ளது .இந்த சுக்ரோஸ் என்பது ப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகும்.
வெல்லத்தின் நிறம் பளிச்சென மாற்ற சோடியம் ஹைட்ரோ சல்பேட் ,சூப்பர் பாஸ்பேட் ,சோடியம் பார்மாலிட்டிஹைடு போன்ற கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெல்லத்தில் சீனி மற்றும் மைதா போன்றவையும் சேர்த்து கலப்படம் செய்யப்படுகிறது.
வெல்லத்தின் நிறம் வெளிர்மஞ்சளாக இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டுள்ளது .மேலும் அந்த வெல்லத்தின் மீது செல்போனின் ஃப்ளாஷ் லைட்டை வைத்துப் பார்த்தால் அதன் ஒளி ஊடுருவி இருந்தால் அதில் சீனி அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அந்த ஒளி ஊடுருவவில்லை என்றால் அது கலப்படம் இல்லாத வெல்லமாகும். மேலும் கலப்படமில்லாத வெல்லம் டார்க் பிரவுன் மற்றும் டார்க் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
வெல்லத்தின் பிரவுன் நிறத்திற்கு அதில் உள்ள மொளாசிஸ் என்ற உடலுக்கு தேவையான சத்து தான் காரணம். இது சீனி தயாரிக்கப்படும் போது நீக்கப்படுகிறது. மேலும் சல்பரை வைத்து ப்ளீச் செய்யப்பட்ட பிறகு தான் வெள்ளை நிற சர்க்கரை ஆக கிடைக்கிறது .
இந்த சீனியில் 99% சுக்ரோஸ் தான் உள்ளது. இதில் தான் பிரச்சனை உள்ளது .நம் உடல் கார்போஹைட்ரேட்டை உடைத்து குளுக்கோஸ் ஆக மாற்றி ரத்தத்திற்கு அனுப்பும் .இந்த குளுக்கோஸ் தான் செல்களுக்குச் சென்று எனர்ஜியை கொடுத்து இயங்க வைக்கிறது .
ஆனால் அந்த குளுக்கோஸ் மாற்றப்படுவதற்கு கணையம் இன்சுலினை சுரக்கும். நாம் அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக்கொள்ளும் போது கணையம் சற்று அதிகம் வேலை செய்து அதிக இன்சுலினை சுரக்க செய்கிறது .இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கணையம் இன்சுலின் சுரப்பை குறைத்து விடுகிறது .இதனால் தான் சர்க்கரை நோய் வருகிறது.
ஆனால் வெல்லத்தில் சுக்ரோஸ் 85 சதவீதம் தான் உள்ளது, மீதம் 15 சதவீதம் தாதுக்களை கொண்டுள்ளது. இருந்தாலும் ஒரு ஸ்பூன் சீனியில் 25 மில்லி கிராம் சர்க்கரை நம் ரத்தத்தில் கலக்கப்படுகிறது. ஒரு ஸ்பூன் வெல்லத்தில் 20 மில்லி கிராம் சர்க்கரை நம் ரத்தத்தில் கலக்கப்படுகிறது .
சர்க்கரைக்கும் வெல்லத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை அதனால் சர்க்கரை நோயாளிகள் வெல்லம் எடுப்பதை தவிர்ப்பது சிறந்தது.
ஆண்கள் ஒரு நாளைக்கு ஒன்பது டீஸ்பூன் சர்க்கரையும் பெண்கள் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் எடுத்துக் கொள்வது போதுமானது என பல ஆராய்ச்சிகள் கூறப்படுகிறது.
எனவே வெள்ளத்திற்கும் சர்க்கரைக்கும் பெரிய அளவில் பாகுபாடு இல்லை, அதனால் இவற்றை அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…