சிறுநீரக கல்லை அடித்து விரட்டுவோம்….!!!

Published by
லீனா

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீரக நோய். இந்த பலரை மரணம் வரையிலும் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதற்கான முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. காலையில் எழுந்ததும் வாழைத்தண்டுச் சாறு சாப்பிடு”, “பார்லி தண்ணீர் குடி!”, “சிறுகுறிஞ்சான் ஜூஸ் குடி” என்று இலவச ஆலோசனைகள் நிறையவே கிடைக்கும். இவை எல்லாமே சிறுநீரைப் பெருக்குகின்றன.

இந்தக் கற்களின் அளவு, எடை, வகை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் சிகிச்சை அமையும். சிறுநீர்க் கல்லிலும் சில வகை உண்டு. அவை: 1. கால்சியம் கற்கள். 2. யூரிக் அமிலக் கற்கள். 3. சிஸ்டின் கற்கள். 4. ஸ்டுரூவைட் கற்கள். இவற்றில் கால்சியம் கற்கள்தான் பொதுவாக இருக்கும். இவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம்  பாஸ்பேட் எனும் ‘வேதி உடை’ அணிந்திருக்கும்.

இந்த சிறுநீரக கற்களிலிருந்து விடுதலையாக சில வழிகள் :

முதல் வழி :

Related image

கோடைகாலங்களில் வெயிலில் அலையக் கூடாது. பெரும்பாலும் உடலில் ஏற்படும் தண்ணீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

இரண்டாவது வழி :

அதிகமான  தண்ணீர் அருந்துங்கள். கோடையில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி  ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது.

மூன்றாவது வழி :

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். உப்பு அதிகமானால், அதிலுள்ள சோடியமானது சிறுநீரில் கால்சியத்தைப் பெருக்கும். அந்தக் கால்சியம் சும்மா இருக்காது. ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் கூட்டுசேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கத்தான் இந்த யோசனை. தவிர, பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் சோடா உணவுகள்  போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றையும் தவிர்ப்பது நல்லது.

நான்காவது வழி :

இளநீர், சிட்ரஸ் பழச்சாறு, வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை நிறைய அருந்த வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கனிகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது வழி :

சிறுநீர்க் கல் உள்ளவர்களுக்குக் கோலிசோடா, கோக் பானம், மென்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் அதிகம். உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, ப்ளம்ஸ், பீட்ரூட், ஸ்ட்ராபெரி, சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக்கீரையைச் சாப்பிட வேண்டாம்.இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

கம்பு, கேழ்வரகு, கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ், பால்கோவா, பால் அல்வா, பீட்ஸா போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். இதுபோல், டாக்டர் சொல்லாமல் சுயமாக கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள். ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். அதிலுள்ள புரோட்டீன் ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும்; சிட்ரேட் அளவைக் குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீர்க் கற்களை உருவாக்கும்.

Published by
லீனா

Recent Posts

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…

9 minutes ago

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

34 minutes ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

36 minutes ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

1 hour ago

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

3 hours ago

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

4 hours ago