வெறும் தண்ணீர்னு நெனச்சீராதீங்க….! அதை நம்ம மருத்துவ நீராக கூட பயன்படுத்தலாம்….!!!

Default Image

தண்ணீர் நமது அன்றாட வாழ்வில் மிக அவசியமான ஒன்று. உணவு இல்லாமல் கூட வாழ்ந்திடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் முக்கியமான ஒன்று.

நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று  என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை சமன்படுத்த சிறந்த பானம்  தண்ணீர்தான்!’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள்.

Image result for தண்ணீர்

இந்தக் காலங்களில் அவர்கள் ஒரு நாளுக்கு சுமார் ஒன்றரை லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆனால்,  வெய்யிலில் அலைந்து திரிபவர்கள் ஒரு நாளைக்கு 2லிருந்து 3 லிட்டர் வரை நீரை குடிக்க வேண்டும். குடிநீரின் அளவு என்பது எவ்வளவு நீர் நம் உடலைவிட்டு வெளியேறுகிறதோ அந்தளவு பருக வேண்டும். சிம்பிளாகச் சொல்வது என்றால், எவ்வளவு தாகம் எடுக்கிறதோ அவ்வளவு நீரைப் பருகவேண்டும்.

நீரில் உள்ள கலோரியின் அளவு :

Image result for தண்ணீர்

நாம் ஒருநாளைக்கு குடிக்கும் ஒரு லிட்டர் குளிர்பானத்தில் சுமார் 1000 கலோரி இருக்கும். ஒரு மனிதனுக்கு, ஒரு  நாளைக்கு உயிர்வாழ்வதற்கான கலோரியின் தேவையே சுமார் 1800லிருந்து 2000 வரைதான். அப்படியிருக்க 1 லிட்டர்  குளிர்பானத்திலேயே 1000 கலோரி வந்துவிடுவதால் நாம்  உண்ணும் எல்லா உணவுகளுமே நம் உடலின் கலோரி அளவை  ஏற்றிவிடும்.

பட்டை நீர் :

Related image

பட்டை இயற்கையான வடிவத்தில் கசப்பாக இருக்கும். பட்டையை அப்படியே உண்டால் உடலை சூடாக்கும். அதுவே பொடியாக்கி  நீரில் கொதிக்க வைக்கும்போது குளிரூட்டும் பொருளாக அதே பட்டை மாறிவிடும். இந்த நீரை அருந்தினால் உடம்பில் ஏற்படும் சூடு  தணியும். தொண்டை வறட்சி நீங்கும்.

இதையும் பொடி செய்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் குளிரும். எரிச்சல் குறையும். உடல் பொலிவு பெறும். வாந்தி  போன்ற பிரச்னைகள் தீரும்.

நன்னாரி சர்பத் :

Image result for நன்னாரி சர்பத் :

நன்னாரி சர்பத் என்றால் நமக்குத் தெரியும். ஆனால் அந்த சர்பத்தை எந்த நீரில் கலக்குகிறார்களோ, அதை எந்தக் கை  கலக்குகிறதோ என்று நமக்குத் தெரியாது. எனவே நன்னாரியை வாங்கி வீட்டு நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால் உடல் சூடு  தணியும். உடல் எரிச்சல் குறையும். காய்ச்சல் வருவது மாதிரி தோன்றும் எண்ணத்தையும் குறைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்