பாகற்காய் என்றாலே கசப்பு என்று தான் அனைவரும் எண்ணுவதுண்டு. ஆனால் இந்த கசப்பு நிறைந்த பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட விரும்பாதவர்கள் பாகற்காயை ஜூஸ்ஸாக செய்து குடிக்கலாம். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பாப்போம்.
பாகற்காய் – 200 கிராம்
மிளகு – 8
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பாகற்காய் ஜூஸ் செய்வதற்கு முதலில் பாகற்காயை நன்றாக கழுவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளை மிக்சியில் போட்டு, அதனுடன் மிளகு, சீரகம், உப்பு தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நுரை வருமளவிற்கு நன்கு மிக்சியில் அடிக்க வேண்டும்.
பிறகு நன்கு அரைத்த பாகற்காய் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்க வேண்டும். இப்பொது நமது உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து, ஆரோக்கியத்தை தரக்கூடிய பாகற்காய் ஜூஸ் ரெடி.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…