நம் பகட்டான வாழ்க்கையில் ஆரோக்கியத்தை மெருகூட்டும் பாகற்காய் ஜூஸ்….!!!

bitter gourd juice

பாகற்காய் என்றாலே கசப்பு என்று தான் அனைவரும் எண்ணுவதுண்டு. ஆனால் இந்த கசப்பு நிறைந்த பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட விரும்பாதவர்கள் பாகற்காயை ஜூஸ்ஸாக செய்து குடிக்கலாம். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையான பொருட்கள் :

பாகற்காய் – 200 கிராம்
மிளகு – 8
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை:

பாகற்காய் ஜூஸ் செய்வதற்கு முதலில் பாகற்காயை நன்றாக கழுவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளை மிக்சியில் போட்டு,  அதனுடன் மிளகு, சீரகம், உப்பு தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நுரை வருமளவிற்கு நன்கு மிக்சியில் அடிக்க வேண்டும்.

பிறகு நன்கு அரைத்த பாகற்காய் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்க வேண்டும். இப்பொது நமது உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து, ஆரோக்கியத்தை தரக்கூடிய பாகற்காய் ஜூஸ் ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்