அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!! தான்றிக்காயின் மருத்துவ குணங்கள்….!!!
நமது அன்றாட வாழ்வில் சமைலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோயகளையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இப்போது தான்றிக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்புமான சுவைகளை கொண்டது. இது செரிமானமாகும் போது இனிப்பாக மாறும். இது உஷ்ண வீர்யம் உள்ளது. இது குளிர்ச்சியான தோடு உணர்ச்சி கொண்டது. இது கப பித்தங்களை தணிக்கும் வல்லமை கொண்டது. மலத்தை வெளியேற்றும் திறனை கொண்டது. கண் பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் கொண்டது.
அஜீரணக் கோளாறு :
தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் மற்றும் இருமலுக்கு தான்றிக்காய் சிறந்த மருந்தாக அமைகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணம் ஆகியவற்றை போக்க தான்றிக்காயின் கனிந்த கனிகள் உதவுகிறது. தான்றிகாய் பொடி பல்வலி, சிலந்தி நஞ்சு, இரைப்பு நீங்கி உடல் வன்மை பெற உதவுகிறது.
மாரடைப்பு :
தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட மாரடைப்பு நோய் விரைவில் குணமாகும். மேலும் இந்த காயை தினமும் உணவில் சேர்த்து வர கண் பார்வை தெளிவடையும், தோளுக்குப் பளபளப்பை ஊட்டும். தான்றி காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கூந்தல் தைலமாகவும், மூட்டு வலி தைலமாகவும் பயன்படுகிறது.
இருமல் :
தான்றிக்காயின் சதை பகுதி மூல நோய், கை, கால் வீக்கம், கண் நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு கண்கண்ட மருந்தாகும். தாந்ரித் தூளை தேனுடன் கலந்து உட்கொள்ளாத இருமல் தணியும்.
புண்கள் :
தான்றிக்காயை தேனில் கலந்து சாப்பிட அம்மை நோய் குணமாகும். தான்றிக்காயின் பருப்பை தூள் செய்து தண்ணீரில் அதனைக் குழப்பி பூச புண், ரணங்கள் ஆறும். இந்த காயை தினமும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து வந்தால் இரைப்பைக்கு அது பலத்தை கொடுக்கும்.