அடடே, இவ்வளவு நாளா தெரியாம போச்சே, உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் இது தானா?
- உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்.
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அதிகமானோரின் மிகப் மாறிக்கொண்டு வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் அது முடியாத காரியம். சிலர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என விரும்பி செயற்கையான மருத்துவர்களை மேற்கொள்கின்றனர். இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
இடைவேளை உணவுகள்
நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் உணவு உட்கொள்ளும் முறை தான் என்று சொல்வது மிகவும் தவறான காரியம். நமது உடல் எடை அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் நமது இடைப்பட்ட உணவுகள் தான். நண்பகல் வேளையில், நாம் உண்ணும் , போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்ற அதிக கலோரி நிறைந்த உணவுகளால் தான் நமது உடல் எடை அதிகரிக்கிறது.
நமது உடலில் ஒரு நாளில் சேர வேண்டிய கலோரிகள், இந்த உணவை சாப்பிடுவதால், ஒரு மணி நேரத்திலேயே கிடைத்து விடுகிறது. இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தாலே நமது உடல் எடை குறைந்து விடும்.
முக்கியமாக அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் கண்டிப்பாக இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்தே வேலை செய்யும் போது, அதில் உள்ள கலோரிகள் கரைக்கப்படாமல், அவை கொழுப்பாக மாறி விடுகிறது.
மென்று சாப்பிட வேண்டும்
நாம் உணவுகளை மென்று சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடாமல், அவசர அவசரமாக உணவை முழுங்குவதால், ஜீரண தன்மை பாதிக்கப்படும். இதனால் கொழுப்புகள் கரையாமல் உடலிலேயே தங்கி விடும்.
வெளியில் சாப்பிடுவதை தவிருங்கள்
நம்மால் அதிகமானோருக்கு வீட்டில் சமைக்கும் உணவுகளை விட, வெளியில் சென்று கடைகளில் சாப்பிடும் உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறோம். கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெய்களில் உள்ள கொழுப்பு, நமது உடலில் கேட்ட கொழுப்புகளை அதிகரிக்க செய்கிறது.
இப்பிடி இருந்தா சாப்பிடாதீங்க
நமது மனநிலை சரியில்லாமல், மன அழுத்தத்தில் இருக்கும் போது, அல்லது கோபத்தில் இருக்கும் போது, உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சாப்பிடும் போது, அது ஜீரண தன்மையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் பருமனையும் அதிகரிக்க செய்கிறது.
மீண்டும் பயன்படுத்தாதீர்கள்
நாம் உணவிற்காக பயந்திய எண்ணெயை மீண்டும், உணவு செய்யும் போது, அதே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதுவும் உடல் எடை அதிகரிப்பதற்க்கான வலிகள் ஆகும்.