அடடே…. இதை போய் சாதாரணமா நெனச்சிட்டோமே…..! இந்த டீ-யில் இவ்வளவு நன்மைகளா…..?

Published by
லீனா

நமது அன்றாட வாழ்வில் டீ ஒரு முக்கியமான பானமாக மாறிவிட்டது. சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல், எந்த வேளையிலும் ஈடுபட மாட்டார்கள். தேநீர்  குடித்தால் தான் புதிய உற்சாகமே வரும். இப்படி தேநீர் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட தேநீர் குடித்தால் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என யாரும் அறிந்து கொள்ளுவதில்லை.

Image result for க்ரீன் டீ

இந்த வகையில் கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான இயற்கை குணங்களை கொண்டது. இந்த டீயை தயாரிக்கும் முறைகள் பற்றியும், குடிக்கும் முறைகள் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

பயன்படுத்தும் முறை :

க்ரீன் டீ பயன்படுத்தும் பலர், இதன் தூள்களை தான் பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீன் டீயை தூளாக கலந்து குடிப்பதை விட, தூளுக்கு பதிலாக இலைகளை பயன்படுத்துவது நல்லது. இலைகளை பயன்படுத்தும் போது, அந்த டீயின் உள்ள முழுமையான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

குடிக்கும் முறை :

நாம் விருப்பப்படும் போதெல்லாம் க்ரீன் டீ குடிப்பது தவறு. ஒரு நாளைக்கு 3 முறை க்ரீன் டீ குடிப்பது நல்லது.  ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது தவறு. அப்படி குடிக்கும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் போல் உறங்க செல்வதற்க்கு முன்பு டீ குடிக்க கூடாது.

நன்மைகள் :

எடைகுறைவு:

இன்றைய உலகில் எடை அதிகரிப்பு என்பது மிக முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது. இதற்க்கு மிக சிறந்த தீர்வை க்ரீன் டீ கொடுக்கிறது. இதில் உள்ள பாலிப்பினால் என்னும் சத்து நமது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

புற்றுநோய் :

 

க்ரீன் டியில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. இந்த டீயை குடிக்கும் போது, நமது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உருவாகாமல் பாதுகாக்கிறது.

சர்க்கரை நோய் :

க்ரீன் டீயை தொடர்ந்து குடிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டீயை தொடர்ந்து குடிக்கும் போது சர்க்கரை நோய் உருவாகுவதை தடுக்கிறது. இந்த டீ டைப்-2 சர்க்கரைநோய் வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் :

க்ரீன் டீயை தொடர்ந்து குடிக்கும் போது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இந்த டீயை தொடர்ந்து குடிக்கும் போது, இரத்த அழுத்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியம் :

க்ரீன் டீயை தொடர்ந்து குடிக்கும் போது, அது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago