அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே, முக அழகை மெருகூட்டும், ஆப்ரிகாட் பழத்தின் அற்புதமான நன்மைகள்
- ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள்.
நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது.
தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம்.
ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது இந்த பழம். இது நமது உடலில் உள்ள பல நோய்களைக் குணப்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டது.
கண்களின் ஆரோக்கியம்
இந்த பழம் கண்கள் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் மிக முக்கியமான போக்கினை வகிக்கிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தமான எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அவற்றில் இருந்து விடுதலை பெறலாம்.
இரத்தம்
இந்த பழத்திற்கு இரத்த சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தி அதிகமாகும். இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு உதவுகிறது.
மலசிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும். இந்த பலத்தை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கி விடும். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சாதியை அதிகரிக்க செய்கிறது. எந்த தொற்றுநோய்களை நமக்கு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
குழந்தைகளின் ஆரோக்கியம்
இந்த பழம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்பாடாகி கூடிய ஒவ்வாமை, அழற்சி காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
சரும பிரச்னை
இந்த பலம் சரும பிரச்சனைகளை நீக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்ககே கூடிய ஆற்றல் இதில் அதிகமாக உள்ளது.
இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால், சருமம் பிரச்சனைகளை நீக்கி, முகம் பொலிவாகவும் அழகாகவும் காணப்படும்.