பிரியாணி இலையில் இப்படி ஒரு மருத்துவ குணம் உள்ளதா? வாங்க பார்க்கலாம்?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பிரியாணி விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இதை நாம் பிரியாணியில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் அதையும் தாண்டி நமது உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பிரியாணி இலையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.
இளமை
பிரியாணி இலையில், இருக்கும் வைட்டமின் ஏ சி பொட்டாசியம் சோடியம் துத்தநாகம் இரும்பு சத்து ஆகியவை நாம் முதுமை அடையாமல் இளமைத் இருக்க உதவுகிறது.
செரிமானம்
பிரியாணியில் செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலும் பிரியாணி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், அதாவது மலச்சிக்கல் குடல் இயக்க பிரச்சினைகள் போன்றவைகள் வராமல் தடுக்கிறது.
நீரிழிவு
பிரியாணி இலையில் நீரிழிவு நோயை தடுக்க கூடிய ஆற்றல் உள்ளது. இது இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரித்து இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இந்த இலை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஒரு மருந்தாக பயன்படுகிறது.
முடி பிரச்சனை
பிரியாணி இலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். அதாவது முடி கொட்டுவது, முடி வெடித்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது. பிரியாணி இலையை நன்கு வேக வைத்து அந்த தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால், முடி சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கி விடும்.