அடேங்கப்பா இவ்வளவு இந்த கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெந்தயக்கீரை!

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கீரைகளும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறது. இது நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

தற்போது இந்த பதிவில் வெந்தய கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

உடல்சூடு 

வெந்தயக்கீரை உடல்சூட்டை தணிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடல் சூட்டை தனித்து, உடலை குளிர்ச்சியாக்குகிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மயக்கம்

நமது உடல்நிலை பெலவீனமாகும் போது, மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். இந்த நேரங்களில் நாம் வெந்தய கீரையை உணவாக எடுத்து கொண்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வாய்ப்புண்

வாய்ப்புண் பிரச்னையுள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு சிறந்த மருந்தாகும். இப்பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயக்கீரையை நீரில் ஊற வைத்து, அந்த நீரை வைத்து வாயை கொப்புளித்து வந்தால் வாய் புண்கள் ஆறிவிடும்.

சர்க்கரை நோய்

இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோயால் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Published by
லீனா

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

6 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

6 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

8 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

8 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

9 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

10 hours ago