அடடே…! இந்த கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா….?
நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான கிழங்குகளை பார்த்திருப்போம். பல வகையான கிழங்குகளை சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு கிழங்குகளும் பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல வகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
வாழை கிழங்கு
வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. வாழைக்கிழங்கில் வாழைக்கிழங்கில் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
உடல் எடை
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு வாழை கிழங்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். உடலில் கெட்ட கொழுப்பினை வாழைக்கிழங்கு குறைக்கிறது, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், தினமும் உடற்பயிற்சிக்கு முன் வாழைக்கிழங்கு சாற்றினை அருந்தினால் வெகு விரைவில் உடல் எடையை குறைக்கலாம்.
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. தொப்பை தோற்றத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. இது உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவுகிறது.
இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதில் வைட்டமின் பி 6 அதிக அளவில் உள்ளது. வாழைக்கிழங்கினை சாறாகவோ அல்லது உணவாகவோ பயன்படுத்தி வந்தால் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும்.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு வாழைக்கிழங்கு ஒரு சிறந்த மருந்தாகும். வயிற்றில் அமில பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளை தீர்க்கிறது.
கல்லடைப்பு
கல்லடைப்பு உள்ளவர்களுக்கு வாழை கிழங்கு ஒரு சிறந்த மருந்தாகும். இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் கல்லடைப்பு ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் இது சிறுநீரக பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.
சிறுநீரகக் கற்கள் பிரச்னை இருப்பவர்கள், தினமும் காலையில் வாழைக்கிழங்கு சாறை ஜூஸாக அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உடைந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிடும்.