அடடே கடலைப்பருப்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள், தானிய வகைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை நமக்கு உணவாக மட்டும் பயன்படுவதில்லை. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த பதிவில் கடலை பருப்பை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி பாப்போம்.
இதயம்
கடலை பருப்பு இதயம் சம்பந்தமான நோய்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த பருப்பில், பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் இதயத்தை எந்த நோய்களும் பாதிக்காதவாறு, பாதுகாக்கக் கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
இது நமது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் அதிகரிக்க செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் உதவுகிறது.
செரிமானம்
கடலை பருப்பில் அதிக அளவில் புரதசத்து மற்றும் நார்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் நாம் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாக உதவுகிறது. உடல் மெலிவாக உள்ளவர்கள், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.
எலும்புகள்
கடலை பருப்பில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த சத்துக்கள் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. எனவே இதனை நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்து வந்தால், நமது எலும்புகள் வலிமையாகும்.
நீரிழிவு
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, கடலை பருப்பு மிக சிறந்த உணவாகும். நீரிழிவு நோயால் ஏற்பாடக் கூடிய பாதிப்புகளை சரி செய்வதில் கடலை பருப்பு மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
நாம் கடலை பருப்பை நமது உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.