உடல் எடை குறைப்பில் இதெல்லாம் ஆபத்தானதா?அட இது தெரியாம போச்சே .!

weightloss

உடல் எடை குறைப்பதற்காக பலவிதமான புதிய  குறிப்புகளையும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்  .ஆனால் அது நல்லதா கெட்டதா என  தெரியாமல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில்  செய்கின்றனர்.அதில் மிக ஆபத்தான முறைகளும் உள்ளது  அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேன் மற்றும் எலுமிச்சை :

சமூக வலைதளங்களில் காணும்  குறிப்புகளில்  பலரும்  பயன்படுத்துவது தேன் மற்றும் எலுமிச்சை தான். ஆய்வு அறிக்கையின்படி இந்த முறை 90 சதவீதம் வேலை செய்வதில்லை என்றும் இதை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது எலுமிச்சையில் உள்ள ஆசிட் அல்சரை உண்டு பண்ணுவதாகவும் கூறப்படுகிறது.

எலக்ட்ரிக்கல் பெல்ட் வகைகள்:

விளம்பரங்களில் வரும் இந்த பெல்ட் வகைகளை போடுவதால் எந்தப் பயனும் இல்லை என ஆய்வு அறிக்கை கூறுகின்றது இதனால்  ஏற்படும் அதிர்வுகள் உடலின் உள் உறுப்புகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆவி குளியல் [ஸ்டீம் பாத்] :

இந்த ஸ்டீம்  குளியல் முறையை மேற்கொள்ளும் போது உடல் எடை ஒரு சிலருக்கு குறையும். ஆனால் இது மிக ஆபத்தானது இதைத் தொடர்ச்சியாக செய்யும் போது உடலில் செல்களில் உள்ள நீர் சத்துக்களை மட்டும் ஆவியாக்கிறது, அதுவும் தற்காலிகமானது தான். இதனால் நரம்புகளில் பிரச்சனையை உண்டாக்கி ரத்த ஓட்டத்தையும் பாதிப்படையச் செய்கிறது.

ஃபாஸ்டிங் முறை:

உணவு எடுத்துக் கொள்ளாமல் உடல் எடையை குறைக்கும் இந்த முறையை பயன்படுத்தும் போது உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் நாம் உள் உறுப்புக்களை பட்டினி போடுகிறோம்.  இதனால் உள் உறுப்புகளின் பாதிப்பு மற்றும் ஸ்ட்ரோக் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

ஆகவே உடல் உழைப்புடன் கூடிய முறையான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மட்டுமே ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு முறையாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்