“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று ஒரு பழமொழி. இன்று நமது சமயலறையில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது உப்பு தான். அனைத்து உணவுகளிலும் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு என்பது உணவுக்கு சுவையை அளிக்க கூடிய ஒன்று. இந்த உப்பை நாம் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
நமது உடலிலும் உப்புச்சத்து என்பது உண்டு. ஆனால் அது அதிகமாகவும் கூடாது, குறையவும் கூடாது. இந்த உப்புச்சத்து நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த உப்பு சத்தின் அளவு அதிகரிக்கும் போதோ, அல்லது குறையும் போதோ அது நமது சிறுநீரகத்தை பாதிக்கும். முதலில் சிறுநீரகத்தை பாதிக்கும், அதன் பின் இந்த நிலை நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும்.
உப்பு சத்து என்றால் என்ன? :
உப்புச்சத்து என்பது நமது உடலில் இருக்கக் கூடிய உப்பின் அளவை விட அதிகமாக இருப்பதே உப்புச்சத்து என்கிறோம். இந்த உப்பு சத்தின் அளவை சரியான அளவில் பராமரிப்பதே நல்லது. உடலில் அதிகளவு உப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக தாகம் எடுக்கும்.
உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் :
பழங்கள் மற்றும் காய்கறிகள் :
உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இது அவர்களது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இது நமது உடலில் உள்ள பெலவீனங்களை நீக்கி உடலுக்கு உறுதியை அளிக்கிறது. உணவுகளை சாப்பிடும் போது, உப்பை குறைத்து சாப்பிட வேண்டும்.
பாட்டிலில் விற்பனையாகும் பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அந்த உணவு பொருட்கள் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க சோடியம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
ஊறுகாய் :
ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் உப்பு போட்ட நொறுக்கு பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடலில் அதிக அளவில் உப்பு, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதனை ஈடு செய்வதற்க்காக சிறிதளவு உப்பு கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு நமது உடல் வந்துவிடும். அப்போது வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையை போக்க அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…