வயிற்றுப்புண் வந்தவர்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்க….!!!
வயிற்றுப்புண்கள் அதுவாக உருவாக்குவதில்லை, நாமாக வரவழைத்து கொள்வது தான். நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இரைப்பையில் இந்த அமிலம் அதிகமாக சுரந்து சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் நமது குடல்களில் ஏற்படும் புகழுக்கு தன அல்சர் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.
அதிகம் உண்பதை தவிர்த்தல்
நாம் நமது உணவு முறைகளை சரியான முறையில் கைக்கொள்ளாமல் இருப்பது தான் அல்சர் ஏற்பட காரணம். நாம் உண்ணும் பொது உணவுகளை ஒரே வேலையாக அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். இடைவெளி விட்டு உணவுகளை உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் உணவு உண்ணும் போது, நெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
சரியான நேரத்தில் சாப்பாடு
நாம் உணவு உண்ணும் போது நமக்கு இஷ்டப்பட்ட நேரங்களில் உணவு உண்ண கூடாது. அதற்க்கென்று வரையறுக்கப்பட்ட நேரங்களில் உணவு உண்ண வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உண்ணும் போது, இதிலிருந்து விடுதலை பெறலாம். மேலும் உணவை உண்ணும் போது நன்கு மென்று உண்ண வேண்டும்.
பாரம்பரிய உணவு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் புளிப்பு பண்டங்களை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை
மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்துகளையும் உட்கொள்ள கூடாது. வலிநிவாரணி மாத்திரைகள், உடல் வலி மாத்திரைகள் போன்றவற்றை தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக் கூடாது. இதனால் வயிற்றுப்புண்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தண்ணீர்
அல்சர் காரணமாக ஏதாகிலும் வலியோ அல்லது அசவுகரியங்களோ உடலில் ஏற்பட்டால், உடனடியாக ஒரு டம்ளர் பச்சை தண்ணீரை குடித்தால் அமிலமானது நீர்த்து போய் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
ஒத்துப்போகாத உணவுகளை ஒதுக்குதல்
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் நமக்கு ஒத்து போவதில்லை. சில உணவுகள் நமது உடலுக்கு ஒத்துக்கொள்ளும், சில உணவுகள் நமக்கு ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
சூடான உணவுகளை தவிர்த்தல்
அதிகமானோர் உணவுகளை சூடாக உண்பதை தான் விரும்புவர். அப்படி சாப்பிட்டால் தான் அவர்களுக்கு சாப்பிட்ட திருப்தியே ஏற்படும். அல்சர் உள்ளவர்கள் உணவுகளை சூடாக உண்பதை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.