கழிப்பறைகள் -நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகை கழிப்பறைகள் சிறந்தது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை அனைவரது இல்லங்களிலும் இன்றியமையாததாக உள்ளது. அதனால்தான் அரசே அதற்கான மானியத்தை வழங்கி அனைவருக்கும் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் மேற்கத்திய நாடுகளின் கழிப்பறை தான் விரும்புகிறார்கள்.
இந்திய கழிப்பறை குந்துதல் முறையில் மலம் கழிப்பதாக அமைந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் உடற்பயிற்சி செய்த பலனையும் பெறலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் கை கால்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் குடல் ,வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த குந்துதல் முறை சிறந்த ஆசனமும் கூட. இந்த முறையில் அமரும் போது செரிமானம் மேம்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் இந்திய கழிப்பறை பயன்படுத்தும் போது சுகப்பிரசவம் நடைபெறவும் வழி வகிக்கிறது.
நம்முடைய பெருங்குடலில் உள்ள மலம் சுத்தமாக வெளியேற்ற இந்த கழிப்பறை உதவுகிறது. இதனால் குடல் சுத்தம் ஆவதோடு குடல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கும்.மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது .
இந்த முறை கழிப்பறையானது அமர்வதற்கு வசதியாகவும் மாடனாகவும் இருப்பதால் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த கழிப்பறையால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது இது மலச்சிக்கலை எளிதாக ஏற்படுத்தக் கூடியது.
மேலும் இந்த கழிப்பறையை பயன்படுத்துவர்கள் காகிதம் பயன்படுத்துகின்றனர். இந்திய கழிப்பறையுடன் ஒப்பிடும்போது அதிக அளவு தண்ணீர் செலவாகிறது. மேலும் எளிதில் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது ஏனென்றால் கழிப்பறையுடன் நம்முடைய உடலும் நேரடி தொடர்பு இருப்பதால் தொற்று எளிதில் ஏற்படும்.
வெஸ்டன் டாய்லெட்டில் குழந்தைகள் விழும் அபாயமும் இருக்கிறது .அதனால் யாரேனும் துணையுடன் தான் இந்த கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். இது வயதானவர்கள் மற்றும் சிசேரியன் செய்தவர்களுக்கு சற்று வசதியாக இருக்கும்.
ஆனாலும் நம்முடைய ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்த்தோமேயானால் இந்திய கழிப்பறை தான் சிறந்தது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…