முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்
- முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது.
தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
செரிமானம்
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், செரிமான கோளாறு மற்றும் மலசிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
புற்றுநோய்
புற்றுநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு முந்திரி பருப்பு தீர்வளிக்கிறது. முந்திரி பருப்பில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
தலை முடி
இன்று அதிகமானோருக்கு மிக சிறிய வயதிலேயே தலைமுடி நரைத்து விடுகிறது. மேலும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் தொடர்ந்து முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். என்றும் இளமையுடனும் இருக்கலாம்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு முந்திரி ஒரு சிறந்த மருந்தாகும். இப்பிரச்சனை உள்ளவபர்கள் தொடர்ந்து முந்திரி பருப்பு சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
உடல் எடை
இன்று அதிகமானோர் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதற்க்கு சிறந்த தீர்வை முந்திரி பருப்பு அளிக்கிறது. முந்திரி பருப்பில் உடல் கூட்டவும், குறைக்கவும் கூடிய ஆற்றல் உள்ளது.
மேலும் தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தவர்களை, முந்திரி சாப்பிடாமல் இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
நரம்புகள்
நமது உடலில் மிகவும் முக்கியமான உடல் உறுப்புகளில் ஒன்று நரம்புகள். இந்த நரம்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நமது உடலும் ஆரோக்கியமாக உள்ளது. முந்திரி பருப்பில் மக்னீசியம் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது.
மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இரத்த அழுத்தம்
முந்திரி பருப்பில் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கக் கூடிய ஆற்றல் உள்ளது. முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.