இந்த சின்னகாயில் தாங்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கு
நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள்.
இன்று நம் மத்தியில் மிகவும் தீவிரமாக பரவி, மக்களை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியுள்ள ஒரு நோய் கொரோனா. இந்த நோய் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களாய் தான் மிகவும் எளிதாக தாக்குகிறது.
தற்போது இந்த பதிவில் நெல்லிக்காயில் உள்ள அற்புதமான மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நம்மில் அதிகமானோர் இன்று மிகவும் எளிதாக பெலவீனமடைவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான் காரணமாக உள்ளது. இந்த காயை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, எளிதில் நமது உடலை நோய் தாக்காமல் பாதுகாத்து கொள்ளலாம்.
கெட்ட கொழுப்பு
நமது உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாகும் போது, இதயம் சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நெல்லிக்காயை சாப்பிடும் போது, நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய குரோமியம் சத்து இதன் மூலம் நமது உடலுக்குள் சென்று, கெட்ட கொழுப்புகள் உடலுக்குள் சேராமல் உடலை பாதுகாக்கிறது.
நீரிழிவு நோய்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே நீரிழிவு பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.