உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க விரும்புகிறீர்களா?உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொடுங்கள்..!
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியமே பெற்றோரின் தலையாய கடமையாக இருக்கும். குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலை அடைவார்கள். பொதுவாகவே சாப்பாடு கொடுப்பதை விட சாப்பாடு ஆரோக்கியமாக கொடுப்பதே சிறந்தது. அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொடுங்கள். குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
அவகேடோ: உங்கள் குழந்தையின் உணவில் கண்டிப்பாக அவகேடோவை சேர்க்கலாம். இதில் வைட்டமின்-இ மற்றும் வைட்டமின்-சி அதிகம் உள்ளது.மேலும் இந்த பழத்தில் பாந்தோத்தேனிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் குழந்தைக்கு அவகேடோ சாலட்டையும் நீங்கள் கொடுக்கலாம்.
வாழைப்பழம்: உங்கள் குழந்தை ஒல்லியாக இருந்தால் நீங்கள் வாழைப்பழத்தை கொடுக்கலாம். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. வாழைப்பழத்தை நன்கு மசித்து ஜூஸ் போன்று குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தை இதனை மகிழ்ச்சியுடன் குடிக்கும்.
பருப்பு: குழந்தைகளுக்கு முக்கியமாக பருப்பு வகைகளை கொடுக்க வேண்டும். பருப்பில் கால்சியம், வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம், குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பருப்பு வகைகள் சாப்பிடுவதன் மூலம் எடையை அதிகரிக்க இயலும்.
முட்டைகள்: முட்டை குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு முட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு வெவ்வேறு முட்டை உணவுகளை நீங்கள் செய்து கொடுக்கலாம். இதனால் முட்டை சாப்பிடும் பழக்கமும் குழந்தைக்கு ஏற்படும்.
நெய்: நெய் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதை ரொட்டி அல்லது பருப்பு செய்து ஊட்டும்போது கலந்து கொடுக்கலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. குழந்தையின் எடையை அதிகரிப்பதில் நெய் பெரிதும் உதவுகிறது.