மரவள்ளி கிழங்கின் மகத்துவம் தெரிஞ்சா தேடி போய் வாங்குவீங்க.!

Published by
K Palaniammal

மரவள்ளி கிழங்கு -மரவள்ளி கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் எடுத்துக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம்.

மரவள்ளி கிழங்கு :

மரவள்ளி கிழங்கு பல உணவு தொழிற்சாலைகளிலும், மருந்து தொழிற்சாலைகளிலும் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. போர்க்காலத்தில் மரவள்ளி கிழங்கை மட்டுமே முழு நேர உணவாக மக்கள் சாப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கேரள மக்களின் உணவில் மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் பிடித்திருக்கும். கேரள பெண்களின் அழகிற்கு மரவள்ளி கிழங்கும் ஒரு காரணமாக கூட இருக்கலாம். அது மட்டுமல்லாமல் மரவள்ளி கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு தருகிறது.

மரவள்ளி கிழங்கில் உள்ள சத்துக்கள்:

மரவள்ளி கிழங்கில் அதிக அளவு  விட்டமின் ஏ ,விட்டமின் சி, விட்டமின் கே,வைட்டமின் பி 12,ரிபோபிளவின் ,போலேட் ,ஆன்டிஆக்ஸிடென்ஸ்  ,இரும்புச்சத்து ,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும்  அதிக அளவில் கார்போஹைட்ரேட்களும் நிறைந்துள்ளது.

வயிற்றுப்போக்கு:

பொதுவாக வயிற்றுப்போக்கு வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறையும் போது ஏற்படுகிறது. மரவள்ளி கிழங்கில் உள்ள அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்தி கெட்ட பாக்டீரியாக்களை குறைக்கும். இதனால் வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்க உதவுகிறது.

மேலும் வயிற்றுப் புண்கள், அல்சர் போன்றவற்றையும் குணமாக்குகிறது.  மரவள்ளி கிழங்கில் உள்ள வேதிப்பொருட்கள் வயிற்றுப் புழுக்களை அளிக்கக் கூடியது. இதன் இலை சாறும் வயிற்று புழுவை அளிக்கக் கூடியது தான். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க  கூடியது.

தலைவலி:

அடிக்கடி தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் மரவள்ளி கிழங்கை இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு ஜூஸ் ஆக அரைத்து குடிக்கலாம். அல்லது வேகவைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.விட்டமின் பி 12 மற்றும் ரிபோபிளவின் சத்துக்கள் ஒற்றை தலைவலிக்கு   சிறந்த நிவாரணியாகும் .

மரவள்ளி கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. பொதுவாக உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறையும்போது தலைவலி தொந்தரவு ஏற்படும், இந்த சமயங்களில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடனடியான தலைவலியை போக்கும்.

சரும பிரச்னை :

மரவள்ளி கிழங்கில் விட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் சருமத்திற்கு நல்ல பொலிவை தரக்கூடியது. வெண்புள்ளிகள், வறட்சி, தோல் சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

இந்த மரவள்ளி கிழங்கின் மாவிலிருந்து முகத்திற்கு பவுடர் மற்றும் பாடி லோஷன் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இது முகத்தில் உள்ள சிறு துளைகள் மறைய செய்து எண்ணெய் பசை அதிகம் சுரப்பதையும் தடுக்கிறது.

இந்த கிழங்கில் மட்டுமல்லாமல் இதன் தோலை சிவி பசையாக்கி சருமத்தில் உள்ள காயம் மற்றும் தழும்புகளில் தடவினால் விரைவில் மறையும் .இதன் இலைச் சாறை கூட தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதன் இலைகளை சாலட் வகைகளில் சேர்த்து சாப்பிடுவது கூடுதல்  சுவையும், சத்துக்களையும் கொடுக்கும்.

கண் கோளாறுகள்:

மரவள்ளி கிழங்கில் விட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகிறது. தற்போதைய சூழ்நிலைகளில் குழந்தைகள் டிவி, மொபைல் போன்றவற்றை அதிகம் பார்ப்பதால் சிறுவயதிலே பார்வை திறன் குறைபாடு ஏற்படுகிறது.

மேலும் கிட்ட பார்வை, தூர பார்வை, பார்வை மங்குதல், மாலைக்கண் போன்ற பிரச்சனைகளையும் மரவள்ளி கிழங்கு தீர்க்கவல்லது.

தாய்ப்பாலை பெருக்கும் மரவள்ளி கிழங்கு:

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிடும் போது அதிக அளவு தாய்ப்பால் சுரக்கும். மேலும் இதில்  விட்டமின் சி, போலேட், இரும்பு சத்து போன்றவை இருப்பதால் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம் .

கர்ப்பிணிகள் எடுத்து  கொள்ளும் போது கருவில் உள்ள குழந்தையின்  வளர்ச்சிக்கு சிறந்தது  . கர்ப்ப காலத்தில் குழந்தையின் உணவு குழாய்களில் ஏற்படும் அடைப்பையும் சரி செய்கிறது.

உடல் எடை அதிகரிப்பு :

மரவள்ளி கிழங்கில் விட்டமின் கே சத்து அதிகம் உள்ளது. இந்த விட்டமின் கே சத்து ரத்த உறைதலுக்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது என ஆய்வில் கூறப்படுகிறது.

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க பல செயற்கை உணவுகளை தேடி செல்வதை விட இயற்கையான முறையில் மரவள்ளி கிழங்கை அவித்து சாப்பிடும் போது எடை விரைவில் கூடும். இது கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இயற்கையான முறையில் உடல் எடையை கூட்டும் சக்தி கொண்டது .

உடனடி எனர்ஜி:

மரவள்ளி கிழங்கில் 80 சதவீதத்திற்கு மேல் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடினமான உழைப்பை மேற்கொள்வோர்கள் காலை உணவாக இதை எடுத்துக் கொள்ளும் போது அந்த நாளுக்குத் தேவையான சக்தி கிடைத்து விடும்.

மேலும் குளுக்கோஸ் தயாரிப்பில் இதன் மாவு திரவ டெஸ்ட்ரோஜனாக பயன்படுகிறது. இந்த மரவள்ளி கிழங்கிற்கு உடனடி எனர்ஜியை கொடுக்கும் தன்மை உள்ளது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் .மேலும் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ,கல்லீரல் பிரச்சனை, பக்கவாதம், நரம்பு பிரச்சனை  உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

மரவள்ளி கிழங்கை பச்சையாக அதிகம்  எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் . ஏனென்றால் இதில் இயற்கையாகவே சயனைடு அதிகம் இருக்கும். இந்த சயனைடு உயிருக்கு ஆபத்து தரக்கூடியது .

மேலும் நான்கு நாட்களுக்கு மேல் உள்ள கிழங்குகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் சைனோஜெனிக்  குளோக்கோஸைட்  என்ற நச்சு பொருளை உருவாக்கக் கூடியது.

மேலும் இதன் உட்புறத்திலும், மேல் பகுதியிலும்  கருப்பு நிற கோடுகள் அல்லது கருப்பு நிற புள்ளிகள் தென்பட்டால் அவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் ஸ்ட்ரோக் ,மாரடைப்பு, கை கால்கள்  உணர்விழத்தல்  போன்றவை கூட ஏற்படுத்தும் .

மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இஞ்சி மற்றும் சுக்கு சேர்க்கப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வதை மிக கண்டிப்பான முறையில்தவிர்க்க வேண்டும். இஞ்சியில் உள்ள லினாமைரேஸ் என்னும் என்சைம் இதில் உள்ள சைனைடை ஹைட்ரஜன் சைனைடாக மாற்றிவிடும். இது மிக விஷ தன்மை வாய்ந்தது. உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

ஆகவே மரவள்ளி கிழங்கை அறுவடை செய்த இரண்டு நாட்களுக்குள்  பயன்படுத்துவது நல்லது . ஊறவைத்து வேகவைத்து வாரத்தில் மூன்று நாட்கள் 50-100கிராம் அளவு எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Recent Posts

விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…

21 minutes ago

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…

41 minutes ago

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

1 hour ago

தமிழ்நாட்டில் போராட்டங்கள் மறுக்கப்படுகிறதா? கே.பாலகிருஷ்ணின் விமர்சனமும்.. சேகர்பாபுவின் விளக்கமும்…

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…

2 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது” மத கஜ ராஜா குறித்து விஷால்!

சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…

3 hours ago