தேங்காய் பூவின் அசத்தும் ஆரோக்கிய நன்மைகள் தெரிஞ்சா தேடி போயி வாங்குவிங்க..!

Published by
K Palaniammal

தேங்காய் பூ -தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்  என்றும் அதில் உள்ள ஆரோக்கிய நலன்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

சாலையோரங்களில் தற்போது பரவலாக விற்கப்படும் இயற்கை உணவுகளில் தேங்காய் பூவும் ஒன்று. பழங்காலம் முதல் நாம் சாப்பிட்ட உணவு இன்றைக்கு அனைவராலும் புதுமையான இயற்கை உணவாக பார்க்கப்பட்டு விரும்பி உண்ணப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பிரபலமாகியும் வருகிறது.

தேங்காய் பூ என்றால் என்ன?

தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. முற்றிய தேங்காயை ஒரு சாக்கு பையில் போட்டு அதில் சிறிதளவு மண் மற்றும் தண்ணீரை சேர்த்து காற்று போகாமல் இறுக்கி கட்டி வைத்து விட வேண்டும். இவை இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை பூவாக மாற எடுத்துக் கொள்ளும் காலம். தேங்காய் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம் மற்றும் அதன் நன்மைகள்;

இளநீரை விட அதிக அளவு சத்து தேங்காய் பூவில் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுத்து பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் முதல் ஸ்கின் புற்றுநோய் வரை வராமல் தடுக்கிறது.அதுமட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் வெள்ளைப்படுதல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

தேங்காய் பூவில் பிரக்டோஸ்  அளவு அதிகமாகவும் சுக்ரோஸ்  அளவு குறைவாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த இயற்கை உணவாகவும் உள்ளது.

மேலும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தேங்காய் பூவை உட்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்காய் பூவில் காப்பர் ,இரும்புச்சத்து, சிங்க்  போன்ற ரத்த உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் இருப்பதால் ரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் போது உடல் சோர்வு குறைந்து புத்துணர்ச்சியாக இருப்பார்கள்.

இதில் செலினியம் மற்றும் ஒமேகா 3,ஒமேகா 6 சத்து அதிகமாக இருப்பதால் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு கண் கருவளையம் வருவதும் தடுக்கப்படுகிறது தினமும் இவற்றை எடுத்துக் கொள்ளும் போது என்றும் இளமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தலைமுடி கருகருவென ஆரோக்கியமான வளர்ச்சியை பெற்றிருக்கும்.

தேங்காய் பூவில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சிறுநீர் நோய் மற்றும் சிறுநீரக தாரையில் தொற்றி ஏற்படாமல் பாதுகாக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் உற்பத்தியை சீராக்கி மாதவிடாய் ஒழுங்கு படுத்துகிறது.

தைராய்டு பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்ளலாம் .

ஆகவே ரோட்டு ஓரங்களில் கிடைக்கும் பஜ்ஜி,  போண்டா வகைகளை தவிர்த்து விட்டு தேங்காய் பூ போன்ற இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது மூலம் ஆரோக்கியத்தையும் அழகையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

59 mins ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

1 hour ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

1 hour ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

2 hours ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

3 hours ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

4 hours ago