இதெல்லாம் தெரிஞ்சா இனிமே ரவா உப்புமாவ கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க..

முழு கோதுமையை பல மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கூறிய பிறகு அதனை உலர வைத்து உடைத்து எடுக்கும் போது தான் ரவை கிடைக்கிறது..

upma (1)

ரவை பலரும்  வெறுக்கும் உணவாக இருந்தாலும் அது ஒரு சிறந்த சிற்றுண்டி எனலாம் . அதன் ஆரோக்கிய நன்மைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை :உப்புமா என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் பிடிக்காத உணவாக உள்ளது. உப்புமாவில் பல வெரைட்டிகள் உள்ளது. ஜவ்வரிசி உப்புமா, கோதுமை உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா என பலவிதமாக செய்து கொடுத்தாலும் யாரும் விரும்புவதில்லை .இதற்கு ஒரு பழமொழியும் சொல்லப்படுகிறது .”ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவை கிண்டி வை அப்படின்னு சொல்லுவாங்க” அந்த அளவுக்கு உப்புமா  பலருக்கும் வெறுப்பான உணவாக உள்ளது.

ஆனால் பத்து நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி செய்யணும்னா அது உப்புமா தான்.. இதில் பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. சமைக்கப்பட்ட 100 கிராம் ரவை உப்புமாவில் 224 கலோரிகளும், மாவுச்சத்து 27 கிராம், புரதம் 5 கிராம், நார்ச்சத்து 7 கிராம், இரும்புச்சத்து ,ரிபோ  பிளேவின் ,செலினியம் ,போலேட் ,கால்சியம்,மெக்னிசியம் , பொட்டாசியம் போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் சமைக்கப்பட்ட ரவை என்பதால் கொழுப்புச்சத்து 10 . 6 கிராம் கொண்டுள்ளது.

ரவை உப்புமா ஆரோக்கிய நன்மைகள் ;

முழு கோதுமையை பல மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கூறிய பிறகு அதனை உலர வைத்து உடைத்து எடுக்கும் போது தான் ரவை கிடைக்கிறது..

ரவையில் தேவையான அளவு கால்சியம் ,மெக்னீசியம் சத்துக்கள்  உள்ளது. இந்த சத்துக்கள் தசைகளின் கட்டமைப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் எலும்பு மற்றும் நரம்புகளுக்கும் வலு சேர்க்கிறது.

கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்டதால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது .இது பசியை கட்டுப்படுத்துவதோடு உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கிறது. நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது . உடல் எடை குறைப்பவர்கள் ரவையை தேர்வு செய்து ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம்.

ரவையில் உள்ள செலினியம்,பொட்டாசியம்  இதய தசையை  பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இந்த செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுவாக்குகிறது.

மேலும் ஒரு நாளைக்கு உடலுக்கு  தேவையான இரும்புச்சத்தில் 13 சதவீதம் ரவையில் இருந்தே கிடைத்து விடுகிறது .இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, ரத்த சோகை ஏற்படுவதையும் குறைக்கிறது.ஆகவே  இனிமேலாவது ரவையை வெறுக்காமல் அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து உணவில் சேர்த்துக் கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்