குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில் காணலாம் .
அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள் என்றால் பிரிட்ஜ் தான். ஆனால் அதில் நாம் எதை வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என தெரியாமலே பயன்படுத்துகிறோம் .ஒரு சிலர் தெரிந்தும் கூட அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர்.
முன்பெல்லாம் மருந்து பொருட்கள் மற்றும் சமைக்காத பொருட்கள் வைக்க தான் பிரிட்ஜ் பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது சமைத்த உணவுகள் தொடங்கி பதப்படுத்தப்பட்ட உணவுகள் வரை பிரிட்ஜில் வைக்கப்படுகிறது.
கடல் உணவுகள், இறைச்சி, பழைய சாதம் ஆகியவற்றை முடிந்தவரை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது .ஏனென்றால் இதில் பாக்டீரியாக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
வெங்காயத்தை நறுக்கியோ அல்லது உரித்தோ ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் மட்டுமல்ல வெளியிலும் கூட உரித்து வைக்க கூடாது. வெங்காயத்திற்கு பாக்டீரியாக்களை ஈர்த்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது பல உபாதைகளை ஏற்படுத்தும்.
மேலும் வெங்காயத்தை உரித்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது இதில் உள்ள போலிக் ஆசிட் ,சிட்ரஸின் சத்து குறைத்து விடும். அது மட்டுமல்லாமல் பிரிட்ஜில் உள்ள பாக்டீரியாக்களையும் ஈர்த்து வைத்துக் கொள்ளும், வெங்காயத்தை காற்றோட்டமான இடத்தில் வைப்பது தான் சிறந்தது.
மேலும் தக்காளி ,கிழங்கு வகைகள் குறிப்பாக உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைக்க கூடாது.
சிட்ரஸின் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றையும் வைக்கக்கூடாது.
நீச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி மற்றும் முலாம் பழத்தையும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. அது மட்டுமல்லாமல் நறுக்கிய பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும்போது எந்த ஒரு சத்துக்களும் நமக்கு கிடைக்காது.
அது மட்டுமல்லாமல் அவ்வாறு நறுக்கி வைக்கும் போது மற்ற உணவுகளில் உள்ள பாக்டீரியாக்கள் பரவி, இதை நாம் உட்கொள்ளும்போது வயிற்று வலி தொந்தரவை ஏற்படுத்தும்.
ஊறுகாய், ஜாம், ஜாஸ் போன்றவற்றில் ஏற்கனவே அதை பதப்படுத்துவதற்கான ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருக்கும். இதை நாம் பிரிட்ஜில் வைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை.
குளிர்பானங்களை உடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை பயன்படுத்தி விடவும்.
தேனை பிரிட்ஜில் வைக்க கூடாது ஏனென்றால் அதில் இயற்கை தன்மை நீங்கி விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது, தேனை வெளியில் தான் வைக்க வேண்டும்.
பிரட், கேக் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைத்தால் அதன் மென்மைத்தன்மை நீங்கி விடும்.
மருந்து பொருட்களை வைக்கும் இடத்தில் இறைச்சி மற்றும் பூக்களை வைக்கக்கூடாது. இது மருந்தில் வேதியல் மாற்றத்தை உருவாக்கி அதன் தன்மையை மாற்றி விடும்.
ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து அதை மீண்டும் சூடு படுத்தி எடுத்துக் கொள்வதால் நமக்கு எந்த ஒரு சத்தும் கிடைக்காது.
ஆகவே நாம் உண்ணும் உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் நம் ஆரோக்கியம் உள்ளது. இவ்வாறு தவறான உணவு பழக்கங்கள் தான் பல நோய்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இனிமேல் ஃப்ரிட்ஜில் எதை வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என தெரிந்து கொண்டு விழிப்போடு இருங்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…