பூண்டை இப்படி சாப்பிட்டால்… உடலுக்கு மிகவும் நல்லது…!!!
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்க்கை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று பூண்டு. பூண்டை சமையலில் சேர்த்தும், பச்சையாகவும் சாப்பிடுவது அநேகரின் வழக்கமாக இருந்து வருகிறது. பூண்டு ஆன்ஜியோடென்ஸின்-2 என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடைய செய்கிறது.
பூண்டை பச்சையாக சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு. பெருந்தமனி தடிப்பு போன்ற பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
பூண்டை இப்படி சாப்பிட்டால் நல்லது :
ஆறு பூண்டுகளை வறுத்து சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கிறது. இதனால் பல நோய்கள் குணமாவதோடு, உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கிறது. இப்போது அவற்றின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
செரிமானம் :
ஆறு வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறுகிறது. மேலும் இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில் பூண்டு உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ளித்து, உடல் நலனை பாதுகாக்கிறது.
கொழுப்பு :
நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் உடலின் மெட்டாபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும். மேலும் உடலில் தேங்கியிருக்கும்கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும்.
இதய நோய்கள் :
ஆறு முதல் ஏழு மணி நேரத்தில் பூண்டில் உள்ள ஆண்டி – பாக்டீரியா, இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட ஆரம்பிக்கும். ஏழு முதல் பத்து மணி நேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கும்.
பத்து முதல் இருபத்துநான்கு மணி நேரத்தில் பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்து, இதயநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.