இன்றைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிகள் பலரும் பல பக்க விளைவுகளை தான் சந்தித்துள்ளனர்.
நாம் எடுக்கின்ற முயற்சிகள் இயற்கையான முறையில் இருந்தால், நாம் முழுமையான பயனை பெற இயலும். செயற்கையான முறையில் நாம் எடுக்கிற முயற்சிகள் அதிகப்படியான பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதனால் நாம் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என பாப்போம்.
வாழைத்தண்டில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அவரின் பயன்களை பற்றி பாப்போம்.
மருத்துவகுணங்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று வாழைத்தண்டு. வாழைத்தண்டில் அதிக அளவு நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வாழைத்தண்டு முக்கியமாக சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளை நீக்க உதவும் ஒரு சிறந்த தாவரம் ஆகும்.
வாழை தண்டு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் வயிற்றில் தொப்பை விழாது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள், வாழைத்தண்டு ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைக்க உதவுகிறது.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால், வயிற்றில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. மேலும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…