வாழைப்பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இத அதிகமானோர் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
வாழைப்பூவில் துவர்ப்புசத்து அதிகம் உள்ளது. அதனால் வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் நமது தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சத்துகளால் நமது உடலில் உள்ள பல வியாதிகள் குணமாகும்.
இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் :
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கூடியது. இரத்தம் சுத்தமாகின்றது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கின்றது.
இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் வாயு அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கொடுக்கிறது. இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளை கரைத்து வெளியேற்ற வாழைப்பூ உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. வாழைப் பூவை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் வயிற்று புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிமாகும்.
வாய்ப்புண் :
மூலநோயினால் பாதித்தவர்களுக்கும், மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ பயன்படுகிறது. வாழைப்பூ மலச்சிக்கலை போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப்பு புண்ணை விரைவில் ஆற்றும் தன்மை உடையது.
கருப்பை கோளாறுகள் :
வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…